அரங்கேற்றம்: ரித்திகா ஸ்ரீனிவாசன் அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர் அரங்கேற்றம்: பிரியங்கா ஆண்டுவிழா: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் ஆண்டுவிழா: பாலசம்ஸ்கிருதி சிக்ஷா ஆண்டுவிழா: குமாரசாமி தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா: ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் போலிங்புரூக்: முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நாட்யா: 'பாலகாண்டம்' பாரதி தமிழ்ச் சங்கம்: 'அன்னபூர்ணா' ஆண்டுவிழா: சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளி GATS: மகளிர்தினம் ஹூஸ்டன்: 'மாமா விஜயம்'
|
|
|
|
|
பாஸ்டன் அருகே உள்ள நேஷுவாவில் உள்ள நியு ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு: ஜூன் 7, 2015 அன்று "நாதோபாஸனா - Musical Worship" என்ற கர்நாடக சங்கீத CDஐ "சங்கீத சூடாமணி" O.S. தியாகராஜன் வெளியிட்டார். வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் சிஷ்யையும், பின்னணிப் பாடகியுமான "இளம் இசைமாமணி" அபர்ணா பாலாஜி பாடியுள்ள இந்த இனிமையான CDயில், பிரபல பாஸ்டன் கலைஞர்களான சூர்யா சுந்தரராஜன் (வயலின்) மற்றும் கௌரிசங்கர் சந்திரசேகர் (மிருதங்கம்) பக்கவாத்தியம் வாசித்துள்ளார்கள். விழாவில் இவர்களுடைய அருமையான கச்சேரியும் நடந்தது. 12 பக்திப் பாடல்கள் கொண்ட இந்த CD கேட்பவர் மனதில் அமைதி ஏற்படுத்துகிறது. "Dwell on Dharma" வரிசையில் மூன்றாவதான இதன் விற்பனைமூலம் கிடைக்கும் லாபம் ஆலயவளர்ச்சி நிதிக்குக் கொடுக்கப்படும். மேலுமறிய.
மே 30 அன்று ஆலயம் மற்றும் அதன் கலாசாரப் பள்ளியான பாரதி வித்யாஸ்ரமத்தைச் சேர்ந்த 17 தொண்டர்கள் "Bike for Dharma - Team Maruti" என்ற பதாகையின்கீழ் களம்கண்ட அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு (veterans) ஆதரவாக நடத்தப்பட்ட "Honor Ride - Ride for Recovery" என்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர். நமது அணி ராணுவ வீரர் நலநிதிக்கு 1300 டாலர் திரட்டியது. மாருதி அணியில் ஒன்பது வயதுச் சிறுமி மைத்ரேயி ராயசம் 10 மைல் தொலைவு சைக்கிள் ஓட்டி அசத்தினார். மேலுமறிய.
மே 16 அன்று பாரதி வித்யாஸ்ரமத்தின் நான்காம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தமிழ் மாணவர்கள் தெனாலிராமனுக்கு எப்படி கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் மந்திரிபதவி கிடைத்தது என்பது பற்றிய நாடகம் நடத்தினர். தெலுங்கு மாணவர்கள் தெலுங்கு அன்னை வணக்கத்துடன் அம்மொழி நிகழ்ச்சியைத் தொடங்கினர். சமஸ்கிருத மாணவர்கள், அம்மொழி கற்க எளிமையானதென்ற பொருள்கொண்ட "சுரச சுபோதா" என்ற பாடலைப் பாடினர். தவிர, ஸ்லோகங்கள், கர்நாடக சங்கீதம், கீதங்கள், ஆன்மீக விநாடி வினா, பகவத்கீதை கலந்துரையாடல் என்று இளைய சமூகத்தினர் தாங்கற்ற கலாசாரக் கல்வியை மேடையேற்றினர். விழாவுக்கு விஞ்ஞானி கணேஷ் கௌண்டின்யா மற்றும் அவர் மனைவி உமா தலைமை தாங்கினர். மேலுமறிய. |
|
|
மே 2 அன்று, வறியோர்க்கு உணவு தருவதற்கான Project Bread என்ற நிறுவனம் நடத்தும் Walk for Hunger நிகழ்ச்சியில் பங்கேற்று, இந்து ஆலயம் மற்றும் பாரதி வித்யாஸ்ரமத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திருமதி. கோமளா கோபாலன் தலைமையில் 1080 டாலர் நிதி திரட்டி அளித்தனர். மேலுமறிய.
ஆலயத்தைப் பற்றி அறிய: www.hindutemplenh.org.
அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்டன் |
|
|
More
அரங்கேற்றம்: ரித்திகா ஸ்ரீனிவாசன் அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர் அரங்கேற்றம்: பிரியங்கா ஆண்டுவிழா: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் ஆண்டுவிழா: பாலசம்ஸ்கிருதி சிக்ஷா ஆண்டுவிழா: குமாரசாமி தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா: ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் போலிங்புரூக்: முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நாட்யா: 'பாலகாண்டம்' பாரதி தமிழ்ச் சங்கம்: 'அன்னபூர்ணா' ஆண்டுவிழா: சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளி GATS: மகளிர்தினம் ஹூஸ்டன்: 'மாமா விஜயம்'
|
|
|
|
|
|
|