மின்லாக்கர் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது சாகித்ய அகாதமி: பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விளம்பரம் பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு விழா தோல்கேன்சருக்கு சூரியன் காரணமல்ல! கணினியில் தமிழ் எழுத குறள் தமிழ்ச்செயலி இளையராஜா - இப்படியும் ஓர் ஆட்டோக்காரர்!
|
|
|
|
|
விரிகுடாக் கலைக்கூடம் (BAFA) புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழர்களுக்கென ஒரு குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர் எவரும் இதில் பங்கேற்கலாம். விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாண்டுகளாகத் திருக்குறள் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளது நினைவுகூரத் தக்கது. தமிழகத்தின் சிறந்த இளம் இயக்குனர்களான திரு. சமுத்திரக்கனி மற்றும் திரு.கார்த்திக் சுப்பராஜ் நடுவர்களாகச் செயல்பட இசைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இவர்கள் இருவரும் அமெரிக்காவிற்கு வருகைதந்து, ரசிகர்கள் முன்னே இறுதிச்சுற்றில் திரையிடப்படும் குறும்படங்களிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். போட்டி அணுகுமுறை: முதல் சுற்று: போட்டிக்கு வரும் குறும்படங்களில் சிறந்த 15 BAFA நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும். இரண்டாம் சுற்று: முதல் சுற்றின் 15 குறும்படங்களிலிருந்து 5 படங்கள் தமிழகத்தின் இளம்இயக்குனர்களால் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். இறுதிச்சுற்று: 5 குறும்படங்கள் அமெரிக்காவின் விரிகுடாப்பகுதியில் திரையிடப்பட்டு, மேற்கண்ட நடுவர்களால் ரசிகர்கள் மத்தியில் தேர்வு செய்யப்படும்.
குறும்படங்களை அனுப்ப துவக்கநாள்: 07-01-2015 இறுதிநாள்: 08-07-2015.
பரிசு: விரிகுடாக் கலைக்கூடம் வழங்கும் 8K மைல்ஸ் மீடியாவின் "அமெரிக்கத் தமிழரின் நம்பிக்கை இயக்குனர்" என்ற பட்டமும், 5000 டாலர் பரிசுத்தொகையும்.
போட்டி விவரங்களுக்குப் பார்க்க: www.bayareafinearts.com |
|
திருமுடி துளசிராமன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More
மின்லாக்கர் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது சாகித்ய அகாதமி: பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விளம்பரம் பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு விழா தோல்கேன்சருக்கு சூரியன் காரணமல்ல! கணினியில் தமிழ் எழுத குறள் தமிழ்ச்செயலி இளையராஜா - இப்படியும் ஓர் ஆட்டோக்காரர்!
|
|
|
|
|
|
|