Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
பொது
தெரியுமா?: ஷூட்டிங் ஸ்டார்ஸ்: கல்விக்கு உதவும் மாணவர்கள்
தெரியுமா?: ஆனிகா எனும் அணில்
தெரியுமா?: சக்தி ஜோதி
- ஸ்ரீவித்யா ரமணன்|ஜூன் 2015|
Share: 
Click Here Enlargeஇவரது வலைப்பக்கம் 'சக்தி ஜோதி' கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான சக்தி ஜோதியின் இந்த வலைப்பூவை சுல்தான் நிர்வகிக்கிறார். சங்க இலக்கியத்தின் சாரலை இவரது கவிதைகளில் அனுபவிக்கலாம். 'தனிமையின் வெளி', 'ஒற்றைச் சொல்', 'நினைவின் பயணம்' போன்ற கவிதைகள் நெஞ்சைத் தொடுவன. பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் பதிப்புக் கண்டுள்ளன. 'எனக்கான ஆகாயம்', 'கடலோடு இசைத்தல்', 'நிலம்புகும் சொற்கள்', 'காற்றில் மிதக்கும் நீலம்' போன்றவை இவரது முக்கியமான கவிதைத் தொகுதிகளாகும். குங்குமம் தோழி இதழில் சங்ககாலப் பெண்பாற் புலவர்களைப்பற்றித் தொடர் எழுதிவருகிறார்.

ஸ்ரீ சக்தி ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் 780 கிராமங்களில் கல்வி, மகளிர் மேம்பாடு, சுயதொழில், நீர்வள மேம்பாடு எனப் பல்வேறு திறக்குகளில் சமுதாயப்பணிகளை ஆற்றிவருகிறார். தமது சிறந்த சேவைகளுக்காகப் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். இவரது கணவர் சக்தி. குழந்தைகள் திலீப், காவியா.
மிக நுண்மையான கருத்தொன்றைக் கூறும் இவரது கவிதை:
இரவெல்லாம் உறைந்து
அதிகாலை பசும்புல்லில்
துளிர்த்திருக்கிற பனித்துளி
நினைவூட்டுகிறது கடலின் இருப்பை
கடலுக்கும் பனித்துளிக்கும் இடையே
இருக்கும் அந்தரங்க வழித்தடத்தின்
மந்திரச் சொல்லை
அவளுக்குமட்டும் திறக்கும்படி
அதனோடு
ஓர் உடன்படிக்கை செய்துகொண்டாள்
ஏனெனில்
கடலாக அவளுடலும்
பனித்துளியாக அவள் மனமும்
இருப்பதை உணர்ந்திருக்கிறாள்.


ஸ்ரீவித்யா ரமணன்,
சென்னை
More

தெரியுமா?: ஷூட்டிங் ஸ்டார்ஸ்: கல்விக்கு உதவும் மாணவர்கள்
தெரியுமா?: ஆனிகா எனும் அணில்
Share: