தென்றல் பேசுகிறது...
Jan 2025
அதிவிரைவு ரயில்கள், அதிவிரைவு நெடுஞ்சாலைகள், மின்வழியே நொடியில் பணப்பரிமாற்றம் என்று கணக்கற்ற துறைகளில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் உலகை வியக்க வைப்பது. நிலவின் இருண்ட மறுபக்கத்தில் விண்கலத்தைக் கொண்டு நிறுத்திய சாதனை புவிப்பந்தில் வேறெந்த நாடும் செய்யாதது. இப்போது விண்கல அறிவியலில் இன்னோர் அருஞ்செயலைச் செய்துள்ளது பாரதம். ஒரே ராக்கெட்டின் மூலம் சில நிமிட இடைவேளையில் இரண்டு துணைக்கோள்களைச் செலுத்தி, ஏவப்பட்ட சில நாட்களுக்குப் பின் இரண்டையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பாரதத்தின் ISRO, மேலும்...
|
|