ஆல்ஃபரட்டா தமிழ்ப்பள்ளி புத்தாண்டுக் கொண்டாட்டம் சிகாகோ தங்கமுருகன் விழா மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிஃபோர்னியா, மிசிகன் விஜயம் 'அக்ஷயா' கிருஷ்ணனுக்குப் பாராட்டு மிச்சிகன் தமிழ் சங்கம் தீபத் திருவிழா
|
|
|
|
|
நவம்பர் 20, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS குழந்தைகள் தினவிழாவை Framingham, MAவில் சிறப்பாகக் கொண்டாடியது. NETS தலைவர் திருமதி வித்யா வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். முதலில் 'மழலைகள் மாறுவேடப் போட்டி' நடைபெற்றது. ஆண்டாள், கீரைக்காரி, பாரதியார், எம்ஜியார், நாட்டுப்புறப் பாடகி முதலிய வேடங்களில் மழலைகள் மேடையை அலங்கரித்தனர். அடுத்து, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. திருமதி மலர் செந்தில் விதிமுறைகளை விளக்கினார். போட்டியில் 5 முதல் 16 வயதான மாணவர்கள் பங்கு பெற்றார்கள். நடுவர்களாகத் திருமதி உமா நெல்லையப்பன், திரு இளங்கோ மற்றும் ஞான சம்பந்தம் ஆகியோர் பொறுப்பேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்தார்கள்.
மூன்றாம் நிகழ்ச்சியாக NETS 'தமிழாக்கம்' வினாடி வினாவை நடத்தியது. ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ்ச் சொல்லைக் கூறி ஆர்வத்துடன் குழந்தைகள் பங்கு கொண்டது சிறப்பு. தொடர்ந்து, 'NETS திறமை வெளிக் கொணரல்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டு, பரதம், குச்சுப்புடி, வாத்திய இசை, மேஜிக் ஷோ எனப் பல திறமைகளைச் சிறுவர்கள் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக 'அமெரிக்காவில் தமிழ்' என்ற தலைப்பில் பேசிய 6 வயது குகன் நந்தகுமாரின் தூய தமிழ் உச்சரிப்பும், வேகமும் கண்டோரை வியக்க வைத்தது. 'வாங்க சிரிக்கலாம்' என்று சரம் சரமாகச் சிரிப்பு வெடியை வைத்தார் பிரகலாத் ஸ்ரீனிவாசன். 'வெள்ளைப் புறா ஒன்று' என்ற பாடலை இனிமையாகப் பாடினார் தியா கோதாவர்தி. சற்று வித்தியாசமாக 'என்னைத் தெரியுமா' என்று எம்ஜியார் முதல் ரஜினி, கமல்ஹாசன், இன்றைய எந்திரன் வரை ஐந்தே நிமிடத்தில் அனைவரையும் கண்முன் நிறுத்தினார் ருத்ரஜீவி வெங்கட்.
இறுதியாக சுபா சுரேஷின் நன்றியுரையும், பங்கு பெற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசளிப்பும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளைச் செல்விகள் நிவேதா பாஸ்கரன், அனுஷ்யா விஜய பாண்டியன், நவீனா ஷண்முகம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். |
|
பூங்கோதை கோவிந்தராஜ், நாஷூவா, நியூ ஹாம்ப்ஷயர் |
|
|
More
ஆல்ஃபரட்டா தமிழ்ப்பள்ளி புத்தாண்டுக் கொண்டாட்டம் சிகாகோ தங்கமுருகன் விழா மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிஃபோர்னியா, மிசிகன் விஜயம் 'அக்ஷயா' கிருஷ்ணனுக்குப் பாராட்டு மிச்சிகன் தமிழ் சங்கம் தீபத் திருவிழா
|
|
|
|
|
|
|