சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்' அரோராவில் வறியோர்க்கு உணவு ஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா... லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி அட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை' 'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா' ஆன்செம்பிள் ஆஃப் ராகாஸ் கலைப் பள்ளியின் 'அபிநவ கானாம்ருதம்' நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி 'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா மாயா ராமச்சந்திரனின் 'சிவனே மாயா'
|
|
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தினவிழா |
|
- பாலு, அருளொளி ராஜாராம்|டிசம்பர் 2010| |
|
|
|
|
|
நவம்பர் 20, 2010 அன்று, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் தினவிழா, அரோரா வெங்கடாசலபதி திருக்கோவில் அரங்கத்தில் 125க்கும் அதிகமான குழந்தைகளின் பங்கேற்பில் நடந்தேறியது.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினர். சிறுமியர் திவ்யா, நிறைமதி அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து வந்த பரதம் அகாதமி குழந்தைகள் நடாசா, சிபி, அஞ்சனா, மானிகா, சிரேயா, வந்திதா, தென்றல், அனிகா, சுதா ஆகியோரின் நடனம் மனதைக் கவர்ந்தது. சிறுமியர் ஆன்யா, அட்சயா, சிந்தூரா ஆகியோரின் நடனம் அருமை. செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடலுக்கு மனீசா, தீபா நடனமாடினர். கர்ணீ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கவுதமன், நீலன், ஆனந்த், தருண், அருண் பங்கேற்ற 'தமிழ் வளர்ப்போம்' நாடகம் நகைச்சுவையாக இருந்தது.
புஷ்பவனம் குப்புசாமியின் நாட்டுப்புறப் பாடலுக்கு நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விமிக்கு, பிருந்தெத்து, ஆதர்சு, நிதின், நிறைமதி, பார்வதி, அட்சயா, தேசுனா ஒயிலாக ஆடினர். நிருத்தியா மாணவர்கள் அக்சய், சைலசா, நிவேதிதா, தேசசுவி, ரீபல் பரதக்கலையைத் திறம்பட வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிகளின் நடுநடுவே திருவள்ளுவர், ஞிக்ஷீ. முத்துலட்சுமி, பாரதியார், எம்.ஜி.ஆர்., முருகர், எந்திரன் சிட்டி போன்ற வேடங்கள் புனைந்து வந்து சிறார்கள் அசத்தினர். மூன்றரை வயதேயான இனியா மணிகண்டன் பாரதியார் வேடமணிந்து அவரது பாடல்களைப் பாடியது மிக அருமை. நிலா காய்கிறது, அடடா மழைடா, பூக்கள் பூக்கும் போன்ற திரைப் பாடல்களுக்கு சாகித்தியா, கர்சிதா, சுசுமிதா, ரித்திகா உள்ளிட்ட சிறுவர் சிறுமியர் குழுக்கள் ஆடியது வியக்கச் செய்தது. முன்னதாக நடந்த பரங்கிக்காய் அழகுபடுத்தும் போட்டியில் சாமா முதல் பரிசும், ஜோனதன் அமலிடோசன் இரண்டாம் பரிசும், பிருந்தெத்து மூன்றாம் பரிசும் தட்டிச்சென்றனர். வீணா, கீதா, ஆகாசு, காயத்திரி நடித்த வடிவேலுவின் நகைச்சுவை நாடகம் அனைவரையும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைத்தது. |
|
நிறைவாக, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் “அமெரிக்காவில் இளைய தலைமுறைக்கு தமிழ் கலாச்சாரம் பெரிதும் சுகமா? சுமையா?” என்றதலைப்பில் திவ்யா, நீலன், ஆனந்த், நிறைமதி, விமிக், கவுதமன் ஆகியோர் காரசாரமாக வாதாடி அவையோரைச் சிந்திக்க வைத்தனர். ஞிக்ஷீ. கிருஷ்ணராசு “சுகமும் சுமையும் கலந்ததே” என்று தீர்ப்பு வழங்கினார். பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பும், நகைச்சுவையான வாதங்களும் இதனை முதல் முயற்சி என்று எண்ண முடியாத அளவுக்கு அமைந்திருந்தன. தமிழ்ப்பள்ளியின் திவ்யா, நிறைமதி, ஆகாசு, யுகன், விமிக்கு, பார்வதி அறிவிப்பாளர்களாக வந்தனர்.
சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் தோனி அறிவிப்புகளை வெளியிட்டார். விழாவின் மூலம் கிடைத்த நிதியின் ஒரு பகுதியை கர்ணீ, சாம்பர்க், நேப்பர்வில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிப்பதாக அறிவித்தார். ப.க.அறவாழி நன்றி தெரிவித்தார். திருமதிகள் லட்சுமி ஆனந்தன், சாந்தி பழனி, அருள்செல்வி பாலு ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
பாலு, அருளொளி ராஜாராம், சிகாகோ. |
|
|
More
சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்' அரோராவில் வறியோர்க்கு உணவு ஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா... லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி அட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை' 'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா' ஆன்செம்பிள் ஆஃப் ராகாஸ் கலைப் பள்ளியின் 'அபிநவ கானாம்ருதம்' நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி 'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா மாயா ராமச்சந்திரனின் 'சிவனே மாயா'
|
|
|
|
|
|
|