பஞ்சாங்க யுகத்துக் கணினி தமிழ் வருடங்களின் பெயர் இந்திய பட்ஜெட் புத்தரின் புன்னகை க்ளின்டனாதித்யன் கதை!
|
|
தெய்வமச்சான் பதில்கள் |
|
- |ஏப்ரல் 2001| |
|
|
|
ஸன்னிவேல் அன்பர்
ஜூனியர் புஷ் 'ப்ரெஸிடெண்ட் ஆகியதற்கும், அமெரிக்கப் பொருளாதாரம் புஸ்வாணமாகிப் போய் கொண்டிருப் பதற்கும் சம்பந்தம் என்ன?
நீர் என்ன டெமாக்ரடிக் பார்ட்டியைச் சேர்ந்த ஆளா..? பங்கு மார்க்கெட் உயர்வை மட்டுமே வளர்ச்சி என்று எல்லோரும் நினைத்த கடந்த இரண்டு, மூன்று வருடங்களை வெறும் வீக்கம் என்ற வகையில் பார்த்தால், வீக்கம் வடிந்து கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியத்தின அறிகுறி என்றுதான் கொள்ளவேண்டும். இதற்கும் 'புஷ்' பிரெஸிடெண்ட் ஆனதுக்கும் விசேஷ சம்பந்தம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு சாமர்த்தியமும் அவருக்கு இருப்பதாக நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். இதற்கும் முன்னால் பொருளாதார சுழற்சிகளில், வளற்பிறையும் உண்டு, தேய் பிறையும் உண்டு. கடந்த வளற்பிறை, வளர்ந்த வேகமும், வளர்ந்த அளவும், ஆரோக்கியமானவையல்ல. அதனால்தான் தற்போதைய தேக்க நிலை..இந்த நிலை கட்டாயம் மாறும். ரமணி, மார்கன் ஹில்
டெஹல்கா.காம் விவகாரத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது..?
என்ன சொல்லி நம்மைச் சொல்ல..? நம்மைப் போல் ஏமாளி இல்ல..! என்று, இந்தியமக்கள் பாட வேண்டியதுதான். மாறுபட்ட கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும், நெருப்பில்லாமல் புகையில்லை! ஊழல் என்பது நம் சமூகத்தில் புரையோடிப் போனப் புற்று நோயாகப் பரவி விட்டிருக்கிறது. திருடனாப் பாத்து திருந்தினாலே தவிர, திருட்டு ஒழியப்போவதுமில்லை. வாஜ்பாயின் அரசுக்கு இது மிகப்பெரிய கரும்புள்ளி! ப்ரியா, ஸன்னிவேல் |
|
உங்களுக்கு பிடித்த நடிகை யார்..?
பரவாயில்லையே! என்னடா, இன்னும் இதுபோல் கேள்வி ஒன்றும் வரவில்லையே, மற்ற பத்திரிக்கைக்காரர்களுக்கு கொடுத்துவைத்த பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே என்று கவலை+வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். கேள்வியை என் வசதிக்கு மாற்றிக் கொள்ளுகிறேன். நடிப்பில் எப்போதும் 'சாவித்ரி'. அழகில் 'ஐஸ்வர்யா ராய்'; வசீகரத்துக்கு, 'சிம்ரன்'.. மற்றபடி அ-னாவிலிருந்து ·-க்கன்னா வரைக்கும், நிறைய பேரைப் வெவ்வேறு வகையில பிடிக்கும்..! லிஸ்ட் போட்டு மாளாது, ஆள விடுங்க.
முத்து கிருஷ்ணன், ஸான் ஹோசே
மூப்பனாரின் கூட்டணி முடிவும், சிதம்பரத்தின் தா.மா.காவிலிருந்து பிரிவும் பற்றி..?
ஸீரியஸா தெரிஞ்சிக்க விரும்பரீங்களா..? அண்ணே.. அவுக அவுக வசதிக்கு ஏத்தாப்பல ஏதாவது காரணஞ் சொல்லி கட்சி ஆரம்பிச்சிடறாங்க..! அப்புறம் அவுகளே அத்த மறந்துபுட்டு, வேற எதுனாச்சும் செய்யறது, அரசியல்ல சகஜமுங்க! நீங்க அரசியல புதுசா பாக்கறீங்களா.. பல்டி, பேச்ச உல்டா பண்றது, எல்லாரும் பண்றதுதானுங்களே..! மூப்பனார் மட்டும் என்ன வித்தியாசமா பண்ணிடுப்புடுவாருன்னு, நினச்சீங்க..! மதவாதம், ஊழல்வாதம், இத ரெண்டையும், புடிச்சிகிட்டா, சமயத்துத் தகுந்தா மாதிரி கோஷத்த மாத்திக்கறதுதான்! சிதம்பரம் இப்பத்திக்கி, அவரோட கொள்கையில உறுதியா இருக்காருங்க..! அது மாறுமா, மாறாதான்னு, காலந்தான் சொல்லோணுமுங்க..! |
|
|
More
பஞ்சாங்க யுகத்துக் கணினி தமிழ் வருடங்களின் பெயர் இந்திய பட்ஜெட் புத்தரின் புன்னகை க்ளின்டனாதித்யன் கதை!
|
|
|
|
|
|
|