சந்தோஷ் சிவனின் Before the Rains எங்கள் ஆசான் விஜயகாந்த் தமிழில் சோல்ஜர் சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார் அய்யன் அடுத்த வாரிசு
|
|
சர்ச்சையில் தசாவதாரம் |
|
- கேடிஸ்ரீ|ஜூன் 2008| |
|
|
|
|
மிகப் பெரிய விழாவை நடத்தி இந்தியத் திரைப்பட உலகத்தை அசத்திய கமலின் 'தசாவதாரம்' திரைக்கு வருவது இழுபறியாகவே உள்ளது. ஆரம்ப முதலே படத்தைப் பற்றிய சர்ச்சைகள் நாலா பக்கமும் கிளம்பின. தற்போது ஹிந்து அமைப்புகள் தசாவதாரத்தில் ஹிந்துகளைப் புண்படுத்தும் விதமாகக் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி வழக்குத் தொடுத்துள்ளன. ஆடியோ வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. அன்று நடைபெற்ற சம்பவங்களுக்காகப் பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கமல்ஹாசன் கடிதம் ஒன்றைத் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்துக்கு எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பேனரில் அமைந்திருக்கும் லோகோ, ஹாலிவுட்டின் ஆஸ்கார் கமிட்டியின் லோகோவைப் போலவே இருப்பதாக ஒரு சர்ச்சை புதிதாகக் கிளம்பியிருக்கிறது. விரைவில் ஆஸ்கார் பிலிம்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக ஹாலிவுட் ஆஸ்கார் விருதுக் கமிட்டி அறிவித்திருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி 'தசாவதாரம்' அரங்கத்துக்கு வரவேண்டும். |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
|
More
சந்தோஷ் சிவனின் Before the Rains எங்கள் ஆசான் விஜயகாந்த் தமிழில் சோல்ஜர் சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார் அய்யன் அடுத்த வாரிசு
|
|
|
|
|
|
|