மன்மதனின் 'ஏசி'! வாரிசுகளின் காலம்! 'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
|
|
மீண்டும் கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு! |
|
- கேடிஸ்ரீ|மார்ச் 2005| |
|
|
|
எதிர்ப்புக்குள்ளான 'சண்டியர்' பெயர் மாற்றம் செய்யப்பட்டு 'விருமாண்டி'யானது பழைய கதை. இப்போது 'மும்பை எக்ஸ்பிரஸ்' பெயர் பலத்த சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் விடுதலைச் சிறுத்தை அமைப்பாளர் திருமாவளவனும், சமீபகாலமாகத் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதற்குக் கடும் எதிர்ப்பு ரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனும், எஸ்.ஜே. சூர்யாவும்தான் இவர்களது இலக்கு.
கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்', எஸ்.ஜே. சூர்யாவின் 'BF' இரண்டின் பெயரும் உடனடியாகத் தமிழில் மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படவில்லை யென்றால் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.
இதற்காக மார்ச் 3 அன்று வாகனப் பயணம் ஒன்று மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தில் கதாநாயகனாக நடித்த வசீகரன் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் பெயர் '·ப்ளவர்ஸ்'!
அதுசரி, படங்களில் நல்ல தமிழில் வசனம் பேசவேண்டும் என்று (சின்னத்திரை அறிவிப்பாளர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்) யார் போராடப் போகிறார்கள்? |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
|
More
மன்மதனின் 'ஏசி'! வாரிசுகளின் காலம்! 'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
|
|
|
|
|
|
|