அர்ஜுனின் அதிரடி காற்றுக்கென்ன வேலி? தெனாலி - சென்சாரின் ஓரவஞ்சனை என் புருஷன் குழந்தை மாதிரி - சினிமா விமர்சனம் பிரியாத வர வேண்டும் - சினிமா விமர்சனம்
|
|
ராஜு சுந்தரத்தின் ஹீரோ அவதாரம் |
|
- |ஏப்ரல் 2001| |
|
|
|
ஆடியவர், ஆட்டுவித்தவர்... அடுத்ததாகக் கதாநாயக அவதாரம் எடுத்து அசத்தவிருக்கிறார். ஆம், தம்பி பிரபு தேவாவை அடியொற்றி நடிப்புக் குளத்தில் குதிக்கத் தயாராகிவிட்டார் அண்ணன் ராஜு சுந்தரம். கதாநாயகியாக நடிக்கவிருப்பது ராஜுவின் மனம் கவர்ந்த சிம்ரன்தான். இந்தத் தூண்டிலைப் போட்டுத்தான் ராஜுவை அமுக்கியிருப்பார்கள் போல.
இவர்கள் இருவரைப் பற்றி உலவி வந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிம்ரன் சமீபத்தில்தான் 'காதல்' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆனாலும்... திருமணத்தை சில ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்திருக் கிறார்களாம்.
ராஜு-சிம்ரன் இணை நடிக்க விருக்கும் புதிய படத்துக்கு 'ஐ லவ் யூடா...!' என்று அழகான தமிழ் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இவர்களை இணைத்த பெருமை, தயாரிப்பாளர்/இயக்குநர் மனோஜ்குமாரைச் (குரு பார்வை, வானவில் புகழ்)சேர்கிறது. ஆனால்...'ஐ லவ் யூடா' படத்தை இயக்கப் போவது , மனோஜ்குமாரின் உதவியாளர் சி.ராஜதுரைதான். இயக்கத்துடன் கதை, திரைக்கதைக்கும் ராஜதுரை பொறுப்பேற்றிருக்கிறார்.
மனோஜ்குமார் தயாரிப்புகளின் ஆஸ்தான நடிகர் பிரகாஷ்ராஜ் இல்லாமலா? முக்கிய கதாபாத்திரமாம் பிரகாஷ¤க்கு!
ரகுவரன், மணிவண்ணன், செந்தில் என்று நட்சத்திரப் பட்டியல் நீள்கிறது. இரண்டு பிரபல கிரிக்கெட் வீரர்கள் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்; அதில் ஒருவர் பாடல் ஒன்றைப் பாடியும் அசத்தவிருக்கிறார் என்பதெல்லாம் சிறப்புச் செய்திகள்.
கதை முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு சுழல்கிறதாம். ராஜு சுந்தரம் இளம் கிரிக்கெட் வீரராகவும், பிரகாஷ்ராஜ் ஓய்வு பெற்ற வீரராகவும் நடிக்கிறார்கள். கிரிக்கெட் சூதாட்டம், கிரிக்கெட் விளையாட்டில் தாவூத் இப்ராஹீம் போன்ற தாதாக்களின் ஆதிக்கம் என எல்லாவற்றையும் அலசவிருப்பதாகக் கூறுகிறார் மனோஜ்குமார் (அஸார்-பிஜ்லானி, கங்குலி-நக்மா கதையெல்லாம் கூட இருக்குமோ?). |
|
இந்திய, பாகிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் போட்டியின் பின்னணியில் பரபரப்பான 'க்ளைமேக்ஸ்' காட்சி இடம்பெறுவது மாதிரி கதையைப் பின்னியிருக்கிறார்களாம். முடிந்தால் ஷார்ஜா அல்லது லண்டனில் படம் பிடித்து அசத்த உத்தேசித்திருக்கிறார்கள்.
'ஐ லவ் யூடா' படத்துக்கு ஒளிப்பதிவுப் பொறுப்பேற்றிருப்பது கார்த்திக்ராஜா. இசைக்கப் போவது பரத்வாஜ். வசனப் பொறுப்பு 'வானவில்' என்.ரகு.
சென்னையில் மார்ச்-15ல் தொடங்கும் படப்பிடிப்பு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று சுற்றிச் சுழலப் போகிறது. பாடல்காட்சிகள்?... சந்தேகமில்லாமல் அந்நிய தேசங்களில்தான்!
படம் ஜூலை-15ல் வெளியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
ரசிகர்கள் 'க்ளீன் போல்ட்' ஆவார்களா? |
|
|
More
அர்ஜுனின் அதிரடி காற்றுக்கென்ன வேலி? தெனாலி - சென்சாரின் ஓரவஞ்சனை என் புருஷன் குழந்தை மாதிரி - சினிமா விமர்சனம் பிரியாத வர வேண்டும் - சினிமா விமர்சனம்
|
|
|
|
|
|
|