|
|
ஆங்கிலம் மூலம்: சிவா மற்றும் ப்ரியா தமிழ் வடிவம் : மதுரபாரதி
பார்த்தன் இந்திரப்ரஸ்தா பிசினஸ் டைம்ஸ் பத்திரிகையில் முழுகி இருந்தான். அங்கே கிருஷ்ண பரமாத்மா ஒரு மர்மப் புன்னகையுடன் வந்தார். 'என்ன அர்ஜுனா, ஏதோ முதலீடு செய்ய யோசிக்கிறாற் போல இருக்கிறதே!' என்றார்.
பார்த்தன் அவசரமாக எழுந்து நின்று சொன்னான், 'மன்னிக்க வேண்டும், தாங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. ஆமாம், முதலீடு செய்ய வேண்டும்தான். முதலீட்டுப் பத்திரத் திலா, பணச் சந்தையிலா, கடன் பத்திரத்திலா, எதில் என்றுதான் புரியவில்லை'.
'கருமம் செய், பலனை எதிர்பாராதே என்று யுத்தகளத்திலே நான் அன்றே சொன்னது நினைவிருக்கிறதா? ஆனால், முதலீட்டைப் பொறுத்தவரை நன்கு பலன் தருமா என்று எதிர்பார்க்கத்தான் வேண்டும்' என்று தொடங்கினார் கோபாலன்.
'பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய இரண்டு வாய்ப்புகள் உள்ளன. நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்யலாம்; அல்லது பரஸ்பர நிதி வழியே முதலிடலாம். பங்குகளை வாங்கினால், அந்த நிறுவனம் லாபகரமாகச் செயல்பட வேண்டும். பொது மக்களிடமிருந்து பணம் திரட்டி அதைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலை யைப் பரஸ்பர நிதி நிறுவனங்கள் செய் கின்றன' என்று சொல்லி முடித்தார் பார்த்தசாரதி.
'புரிந்தது. இரண்டில் எது நல்லது? கர்ம யோகமா, கர்ம சன்யாசமா, இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் சிரமம் என்று அப்போது நினைத்தேன்...' என்றான் சிரித்தபடி பார்த்தன்.
'ஒரு மோசமான குழுவில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் என்ன செய்துவிட முடியும்? இந்தியாவில் நிறையத் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்; ஆனால் ஒரு குழுவாகப் பெரிய சாதனைகளைச் செய்ய முடியவில்லை. குழுவே சிறப்பாக இருக்க வேண்டும்.
'ஒரு பரஸ்பர நிதி என்பது கிரிக்கெட் டீம் போன்றது. நிதியின் நிர்வாகி பல பங்குகளில் முதலீடு செய்து, வரும் நிகர வருவாயை முதலீட்டாளருக்குக் கொடுக்கிறார். ஒரு நிதியில் இருக்கும் எல்லாப் பங்குகளுமே பிரமாதமான வருவாயைத் தந்துவிடாது. சிறந்த வருமானம் தரும் பங்குகளை, மோசமான வருவாய் தரும் பங்குகள் சரிக்கட்டி விடும். ஆகவே போன 30 ஆண்டு களில் சராசரி வருமானம் 11 சதவிகிதம்தான்.
'வேன்கார்ட் 500 இண்டெக்ஸ்தான் மிகப் பரவலாகக் காணப்படுவது. S&P 500-ல் உள்ள எல்லாக் கம்பெனிப் பங்குகளிலும் அது முதலீடு செய்கிறது. 1000 டாலர் இதில் முதலீடு செய்தால் அதைப் பிய்த்துப் பிய்த்து 500 கம்பெனிகளில் முதலீடு செய்கிறார்கள். 500 கம்பெனிகளுமே மிகச் சிறந்தவை என்றால் இப்படிச் செய்வது நல்லதுதான். ஆனால், அதில் ஒரு சிலது மட்டுமே சிறந்தவை.'
'அப்படியா! இரண்டு S&P 500 கம்பெனி களின் உதாரணத்தோடு எனக்கு இதை விளக்க முடியுமா?' என்று அர்ஜுனன் கேட்டான்.
'சொல்கிறேன். நீ ஸ்டார்பக்ஸ் (SBUX) கா·பி ஸ்டோர் செயின், ஆண்ட்ரூ கார்ப்பரேஷன் (ANDW) கேபிள் தயாரிப்பாளர், ஆகிய கம்பெனிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். 10,000 டாலரை ஸ்டார்பக்ஸில் முதலீடு செய்திருந்தால் 10 ஆண்டுகளில் அது 110,000 ஆகியிருக்கும். ஆண்ட்ரூ கார்ப்பரேஷனிலோ அது 4,200 தான் ஆகியிருக்கும்; நஷ்டம் 5,800 டாலர். ஆக ஸ்டார்பக்ஸில் கிட்டிய வருவாயை ஆண்ட்ரூ தின்றிருக்கும்' என்று விளக்கினார் பரந்தாமன்.
'ராஹ¤ல் திராவிட் ரன்களைக் குவித்தாலும் பௌலர்கள் கைவிட்ட மாதிரியோ இது?' என்று கேட்டான் அர்ஜுனன்.
'மிகச் சரி. டைகர் உட்ஸை எடுத்துக் கொள். அவரது வெற்றி அவரது திறமையையும் உடல் சரிநிலையையும் பொறுத்தது. அதே போல, ஒரு தனிநபருக்குச் சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்தால், அவருக்கு நல்ல லாபம் கிட்டும்.
'உதாரணமாக, 10,000 டாலரை 1970-ல் வால் மார்ட்டில் போட்டிருந்தால் இன்றைக்கு அது 13 மில்லியன் ஆகியிருக்கும்! அதையே S&P 500 குறியீட்டு நிதியில் போட்டிருந்தால் 160,000தான் கிடைக்கும். சரியான பங்கைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை. அதற்கான உத்தி களைக் கற்க வேண்டும். நீ வாங்கும் எல்லாப் பங்குகளுமே நல்ல வருவாயைத் தருவதில்லை' என்று சொல்லி முடித்தார் கிருஷ்ணன்.
'கிருஷ்ணா நீ ஒருமுறை 'எவன் ஒருவன் கடினமாக இருக்கிறது என்றோ, அச்சத் தினாலோ தனது கடமையில் தவறுகிறானோ, அவனுக்கு மேன்மை கிடையாது' என்று கூறியது நினைவிருக்கிறது. பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்கும் கலையைக் கற்றாலொழிய லாபம் பெற முடியாது. அதனால்தான் பலரும் நஷ்டமடைகிறார்கள். சரி, தேடித்தேடிப் பங்குகளை வாங்கத் தெரியாதவர் பேசாமல் பரஸ்பர நிதியில் பணத்தைப் போட்டுவிடலாமா?'
'அதுதான் வழி. ஒரு பரஸ்பர நிதி நிர்வாகி பலவகைப் பங்குகளிலும் பணத்தை முதலிடு கிறார். இந்த உதாரணத்தைப் பார்: ஈடன் வேன்ஸ் ஒரு பரஸ்பர நிதி நிறுவனம். ஒருவர் டிசம்பர் 31, 1979 அன்று 10,000 டாலரை ஈடன் வேன்ஸில் முதலிடுகிறார் (வரும் ஈவுத் தொகைகளையும் மறுமுதலீடு செய்கிறார்) என்று வைத்துக்கொள்வோம். 25 ஆண்டு களில் அது 10.6 மில்லியன் டாலராகி இருக்கும் என்று அந்தக் கம்பெனியின் 2004 ஆண்டறிக்கை சொல்கிறது. |
|
'அதே 10,000ஐ, அந்தக் கம்பெனி நிர்வகிக்கும் 'ஈடன் வேன்ஸ் டாக்ஸ் மேனேஜ்டு க்ரோத் ·பண்ட் (CAPEX) என்பதில் போட்டிருந்தால், டிசம்பர் 31, 2004 அன்று அதன் மதிப்பு 209,000 தான் இருந்திருக்கும்.'
'புரிந்தது. சரியான பங்குகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?'
'அடிப்படை ஆய்வு, தொழில்நுட்ப ஆய்வு என்று இரண்டு வழிகள் உண்டு. முழுப் போரையும் திட்டமிடுவது போன்றது அடிப்படை ஆய்வு. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அதாவது நீண்ட காலத்துக்குப் பங்குகளை வைத்திருப் பவரானால் அடிப்படை ஆய்வு பயன்படும். ஒரு கம்பெனியின் பங்குகள் தற்போது குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டு, காலக் கிரமத்தில் நல்ல வளர்ச்சியை எட்டக்கூடிய பங்குகளை இனம் காண இது உதவும். வாரன் ப·பட், பென் கிரஹாம், பீட்டர் லின்ச் போன்ற பெரிய ஆசாமிகள் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
தொழில்நுட்ப ஆய்வு பத்மவியூகம் போன்றது. எப்போது உள்ளே நுழையலாம், எப்போது வெளியேறலாம் என்பது உனக்குத் தெரிந் திருக்க வேண்டும். சிறிது காலமே பங்குகளை வைத்திருந்து, நல்ல வருமானம் பார்ப்பது உன் வழியானால், தொழில்நுட்ப ஆய்வு உனக்குச் சரியாகும். 'எப்போது வாங்கலாம்? குறுகிய காலத்தில் பங்கு விலை ஏறுமா, இறங்குமா? அந்தக் காலத்தினுள் அது அதிகபட்சம் எந்த விலையை எட்டும்?' என்பது போன்ற கேள்விகளுக்கு அது விடை தருகிறது.
இரண்டு உத்திகளிலுமே நல்லது கெட்டது உண்டு. ஒரு முதலீட்டாளர் நல்ல லாபம் பெற வேண்டுமென்றால், இரண்டு உத்திகளையுமே பயில வேண்டும்.
கிருஷ்ணனின் கால்களில் அர்ஜுனன் விழுந்தான். 'பரந்தாமா! நல்ல பங்குகளை நான் வாங்குவேனோ இல்லையோ தெரியாது. ஆனால் போர்க் காலத்திலும் சரி, இப்போதும் சரி, எனக்குச் சரியான வழி காட்ட உன்னைத் தேர்ந்தெடுத்தது மிகச் சரிதான்' என்றான் நன்றிப் பெருக்கோடு.
ஆங்கிலம் மூலம்: சிவா மற்றும் ப்ரியா தமிழ் வடிவம் : மதுரபாரதி |
|
|
|
|
|
|
|