கலவை காய்கறி சூப்
|
|
|
|
கஷாயப் பொடி
தேவையான பொருட்கள்: கொத்துமல்லி விதை - 1 கிண்ணம் வெந்தயம் - 1/4 கிண்ணம் சீரகம், மிளகு, ஓமம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய் - ஒவ்வொன்றும் 2 மேசைக்கரண்டி சுக்குப்பொடி - 1/4 கிண்ணம் பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி மஞ்சள்பொடி - 2 மேசைக்கரண்டி.
செய்முறை: மல்லிவிதை மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக நிதானமான தீயில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். சீரகம், மிளகு, ஓமம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் நன்றாகப் பொடி செய்யவும். இத்துடன் சுக்குப்பொடி, பட்டைப்பொடி, மஞ்சள்பொடிகளைச் சேர்த்து, நன்கு கலந்து, ஒரு பாட்டிலில் இட்டு உபயோகிக்கவும்.
ஒருவருக்கு அரை கிண்ணம் நீர், அரை கிண்ணம் பால், 1 தேக்கரண்டி கஷாயப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து, தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் காலையில் குடிக்க, உடம்பு சுறுசுறு என்றிருக்கும். வயிற்று உபாதைகள், சளி, ஜுரம், ஆஸ்துமா, கைகால் வலி முதலிய தொல்லைகளுக்கு நல்ல நிவாரணி.
லேகியம்போல இதைச் சாப்பிட, பொடியுடன், சீவிய வெல்லம் அல்லது தேன் மற்றும் நெய் சேர்த்துச் சிறு சிறு உருண்டைகளாக்கி, தேவைப்பட்டபொழுது சாப்பிடலாம். |
|
வசுமதி கிருஷ்ணஸ்வாமி, வெஸ்ட் புளூம்ஃபீல்டு, மிச்சிகன் |
|
|
More
கலவை காய்கறி சூப்
|
|
|
|
|
|
|