Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கோதுமை பிடிகொழுக்கட்டை
ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை
இந்தா, பிடி கொழுக்கட்டை!
- கமலா சுவாமிநாதன்|ஜூலை 2014|
Share:
அரிசி பிடிகொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1 தேக்கரண்டி
காராமணி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 2 கிண்ணம்

செய்முறை
புழுங்கலரிசியையும் துவரம் பருப்பையும் மிக்சியில் போட்டு ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காராமணியை லேசாக வறுத்து, வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பிறகு காராமணி, தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் விட்டு உப்புப் போடவும். தண்ணீர் கொதி வந்தவுடன் ரவையைப் போட்டுக் கிளறவும். கெட்டியானதும் அடுப்பை அணைத்து கீழே இறக்கி வைத்துக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, பத்து, பன்னிரண்டு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். சூடான பிடி கொழுக்கட்டை தயார். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
கமலா சுவாமிநாதன்
More

கோதுமை பிடிகொழுக்கட்டை
ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை
Share: 




© Copyright 2020 Tamilonline