கோளாப்பூ
|
|
|
|
|
தேவையான பொருட்கள் பெரிய மாங்காய் - 2 சர்க்கரை - மாங்காய்த் துருவல் சம அளவு லவங்கப் பட்டை போடி - 1/2 தேக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி ஏலக்காய் - 4 (பொடி செய்து கொள்ளவும்) செய்முறை மாங்காய்களை நன்கு கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து, தோல் சீவி, துருவிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அது முழுகும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, கம்பிப் பாகு பதம் வரும்வரை கொதிக்க விடவும். (சர்க்கரை கசடு இருந்தால், 1/2 டம்ளர் பால் விட்டால் அழுக்கு நுரைத்துக் கொண்டு வரும். அதை நீக்கவும்). பிறகு மாங்காய்த் துருவல், கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி, சர்க்கரைப் பாகில் சேர்த்து கைவிடாமல் 15 நிமிடம் மிதமான சூட்டில் தோசை மாவுப் பதம் வரும்வரை கிளறி இறக்கவும். ஏலக்காய், லவங்கப் பட்டைப் பொடி தூவிக் கிளறி விடவும்.
பின் குறிப்பு சுந்தா கலவை கொதிக்கும் போதே சுவைக்கு ஏற்ப, மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை சேர்க்கலாம்.
சப்பாத்தி, பூரி, தோசைக்கு இதை சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். |
|
விஜயலட்சுமி சேதுகணேசன், ஆல்ஃபரட்டா, ஜார்ஜியா |
|
|
More
கோளாப்பூ
|
|
|
|
|
|
|