வாழைக்காய் பக்கோடா
|
|
|
|
|
தேவையான பொருட்கள் வாழைக்காய் - 2 அல்லது 3 வெங்காயம் (பொடியாய் நறுக்கியது) - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு இஞ்சி - 1 சிறு துண்டு எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு கொத்துமல்லி (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு முந்திரிப் பருப்பு - 6
பஜ்ஜி மாவுக்கு கடலை மாவு - 1 கிண்ணம் அரிசி மாவு - 3/4 கிண்ணம் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிதளவு எண்ணெய் - பொரிப்பதற்கு |
|
செய்முறை வாழைக்காயை வேகவிட்டுக் கட்டியில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை வெடிக்க விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு போடவும். சிவந்தவுடன் மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு, பெருங்காயம் சேர்த்து வதக்கி, கொத்துமல்லி கறிவேப்பிலை போடவும். பொரியல் போல வந்ததும் எலுமிச்சைச் சாறு ஊற்றி உப்புப் போட்டுக் கலந்து வைக்கவும். பஜ்ஜி மாவுபோலக் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு போட்டுக் கெட்டியாகக் கரைத்துக் கொண்டு வாழைக்காய் கலவையை உருண்டையாக உருட்டி மாவில் முக்கி எடுத்து, எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையாக உருளைக் கிழங்கு போண்டா போலவே இருக்கும். கெச்சப், தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி |
|
|
More
வாழைக்காய் பக்கோடா
|
|
|
|
|
|
|