பருப்புத் துவையல் சீரக ரசம் வாழைப்பழப் பச்சடி
|
|
|
|
|
எப்பவும் வகைவகையாச் சாப்பிட்டுக்கிட்டே இருந்தா எப்படி? வயித்துக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டாமா? பட்டினி கிடக்கச் சொல்லலைங்க, கொஞ்சம் பத்தியமாச் சாப்பிடுங்க என்கிறோம். பத்தியச் சாப்பாடு எப்படிச் செய்யறதுங்கிறீங்களா! இதோ.....
மிளகுக் குழம்பு
தேவையான பொருட்கள் மிளகு - 1 தேக்கரண்டி துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 புளிக் கரைசல் - 1 மேசைக்கரண்டி பெருங்காயத் தூள் - 1/4 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - 3 கொத்து மணத்தக்காளி (அ) சுண்டை வற்றல் - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு வெல்லம் - சிறிதளவு நெய் - சிறிதளவு
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
|
|
செய்முறை மிளகு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை இவற்றை லேசாக நெய் விட்டு வறுத்துத் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். புளிவாசனை போனபின் அரைத்த விழுது சிறிது சேர்த்து, சிறிதுநேரம் கொதித்த பின் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, வற்றல், கறிவேப்பிலை தாளித்து மிளகுக் குழம்புடன் சேர்க்கவும். சூடான சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட அபாரச் சுவையுடன் இருக்கும்.
வர்தினி நாராயணன், கூப்பர்டினோ, கலிஃபோர்னியா |
|
|
More
பருப்புத் துவையல் சீரக ரசம் வாழைப்பழப் பச்சடி
|
|
|
|
|
|
|