|
உப்பா? பசுஞ்சாணமா? |
|
- |மே 2024| |
|
|
|
|
நீங்கள் கீதையும் பாகவதமும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக இருக்கலாம்; கிருஷ்ண சேவையில் பற்பல ஆண்டுகளைச் செலவிட்டதாகக் கூறலாம்; ஆனால், அன்பின் திறவுகோல் இல்லாமல் நீங்கள் அவர் வசிக்கும் கோலோகத்திற்குள் நுழைய முடியாது! சுவாமியுடன் இருப்பதாகவும், சுவாமிக்கு அருகில் இருப்பதாகவும் கூறிக்கொண்டு, பல ஆண்டுகளாகப் பிரசாந்தி நிலையத்தில் இருக்கலாம்; ஆனால், சேவையாக வெளிப்படுகின்ற அன்பை வளர்த்துக் கொள்ளாமல் நீங்கள் என்னை அறிய முடியாது.
முன்னொரு காலத்தில் ஒரு மாணவன் இருந்தான், அவன் தன் மூதாதையரையும் ஆச்சாரியரையும் குறித்துப் பெருமிதம் கொள்வான். அவர்கள் உலகப் புகழ்பெற்ற மகாபண்டிதர்கள் என்பான். நான் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வாயா என்று குரு ஒருநாள் அவனைக் கேட்டார். மாணவன் உடனடியாக, "ஏன் தயக்கம், கேளுங்கள், பதில் கிடைக்கும்! நான் சோமயாஜி குடும்பத்தைச் சேர்ந்தவன்; என் தந்தை பிரபல பண்டிதர். நான் பல ஆண்டுகளாக உங்கள் காலடியில் அமர்ந்து கற்று வருகிறேன்! நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் எனக்குத் தெரியாதா?" என்று பதிலுரைத்தான்.
"லவணம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?" என்று கேட்டார் ஆசிரியர். மாணவன் சிரித்துக் கொண்டே, "ஓ, இந்த அபத்தமான கேள்வி எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது! எனக்குத் தெரியாதா? லவணம் என்றால் பசுஞ்சாணம்!" என்றான்.
லவணம் என்பது ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் சொல். இதன் பொருள் 'உப்பு' என்பது எல்லோருக்கும் தெரியும். இதைக்கூட கர்வம் கொண்ட சீடன் கற்றுக் கொள்ளவில்லை. உங்கள் பார்வை அன்பினால் ஒளிராவிட்டால் உங்களால் உண்மையைக் காண முடியாது. |
|
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2024 |
|
|
|
|
|
|
|