|
தர்ம போதனை - ஒரு மகாத்மாவின் உண்மையான தர்மம் |
|
- |மே 2023| |
|
|
|
|
சமர்த்த ராமதாசர் சிவாஜியின் முன் தோன்றி வழக்கம்போல "பவதி பிக்ஷாம் தேஹி" என்று கூறினார். குருவே கடவுள் என்பதை சிவாஜி உணர்ந்திருந்தார்; ஒரு காகிதத்தில் எதையோ எழுதி, ராமதாசரின் பையில் மரியாதையுடன் வைத்தார். பசியைப் போக்க, ஒரு காகிதம் எப்படிப் போதும்?" என்று ராமதாசர் கேட்டார். சிவாஜி அதைப் படிக்கும்படி வேண்டினார். முழு ராஜ்யத்தையும் தனக்குச் சொந்தமான அனைத்தையும் சிவாஜி குருவுக்கு அன்பளிப்பாக அதில் எழுதியிருந்தது.
சமர்த்த ராமதாசர், "இல்லை, எனது தர்மம் தர்ம போதனை, அதாவது மக்களுக்குச் சரியான வாழ்க்கை முறையை அறிவுறுத்துவதுதான். உங்களைப் போன்ற க்ஷத்திரியர்கள் (போர் வீரர்கள்) நாட்டை ஆளும் தர்மத்தைப் பின்பற்ற வேண்டும், உங்கள் பாதுகாப்பில் இருக்கும் கோடிக் கணக்கானவர்களுக்கு அமைதியும் திருப்தியும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்." என்று கூறினார்.
யாக்ஞவல்கியரும் ஒருமுறை ராஜ்யத்தை மறுத்தார், ஏனென்றால் அவர் சுதந்திரத்தின் சாம்ராஜ்யமான மோட்சத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருந்தார். வசிஷ்டர், ராமர் வழங்கிய ஒரு ராஜ்யத்தைத் துறந்ததாகவும் கூறப்படுகிறது. |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |
|
|
|
|
|
|
|