|
பிப்ரவரி 2003 : குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|பிப்ரவரி 2003| |
|
|
|
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)
குறுக்காக:
3.பருவம் வந்த முதல் பாட்டில் துள்ளும் (5) 6.கவனம்! மசிய வை, காட்டு மை இல்லாத உலகு (4) 7.கப்பல் உள்ளே கவிழத் தொடங்க அடிதடி (4) 8.அறப்போராட்டக் கொள்கையோன் வெளிப்புறம் காதி அணிந்து ...(6) 13.வள்ளல் தலையில்லாத அயர்ச்சி மயக்க தயிர் விற்றவர்கள் (6) 14.கண்ணில் தூற்றல் விளிம்புகள் நான்கு சிங்கங்களுக்கு மேடையோ? (4) 15.வம்பை ஆரம்பித்த அவசரச் செய்தி உண்மையாக இருக்காது (4) 16.சனியன்றும் காலையில் வரும் (2, 3) |
|
நெடுக்காக:
1.சிலர் கறி செய்துண்பது கோயம்புத்தூரில் விளைந்ததோ? (5) 2.காதல் நூல் வகையில் வீட்டுத் திண்ணை முழுமையில்லை (5) 4.ராகத்துடன் சொல்லப்படும் விஷயம் (4) 5.விழுந்ததடா கம்பம், மறைந்ததடா பொய்கை (4) 9.முக்கால்வாசி மாற்றிச் செய்வாரா? விரும்பி அழை (3) 10.சுரமின்றிச் சித்தரி குண்டு சுற்ற ஈடுபாட்டுடன் சுவைத்தவை (5) 11.ஒரு மாதம் நகைத்திடுவார் கால் நடு வால் வெட்டி (5) 12.உரைத்திடு பெண்ணே! வார்த்தையால் தாக்குதல் செய்து (4) 13.சொந்தமான மாலையின்றி ஆட்சி புரிந்தாள்! (4)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக: 3.வசந்தம் 6.வையகம் 7.கலகம் 8.காந்தியவாதி 13.ஆய்ச்சியர் 14.கல்தூண் 15.வதந்தி 16.விடி வெள்ளி நெடுக்காக: 1.கோவைக்காய் 2.அகத்திணை 4.சங்கதி 5.தடாகம் 9.வாராய் 10.ரசித்தவை 11.கார்த்திகை 12.சொல்லடி 13.ஆண்டாள் |
|
|
|
|
|
|
|