|
நவம்பர் 2002 : குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|நவம்பர் 2002| |
|
|
|
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)
குறுக்காக
1. அண்ணனா? இல்லை, அதே ஆள் பழங்காலத்தில் (5) 4. பல வண்ணங்களில் வேட்டிகள் இங்கே பக்தர்களால் அலசப்பட்டிருக்கும் (3) 6. மைசூர் ஆண்டவர் ஓரளவு இனிமையானவர் (3) 7. மண்ணில் மறைந்து தாக்கி ஆளைக் கொல்லும் (5) 8. முதல் தரகன் மாட்டைக் கட்டும் வழி (4) 9. கண்டபடித் தீட்டுபவன் (4) 12. தோகை விரித்தாடும் பருவம் (2, 3) 14. கடையில் பெறு, பின்னுடன் பயத்தில் ஓடி வா (3) 16. சூரியனுக்கருகே தங்கத்தைவிட அரிதானது (3) 17. வாசல் முன் திசை தடுமாறிப் பேச வைக்கும் (5) |
|
நெடுக்காக
1. மார்பை மூடுவதைத் தாண்டிச் சென்று (3) 2. பிறகு தெய்வமில்லாக் கோலம் காணப்படும் தளம் (5) 3. இடையில் தாவிக் கல்லெறிதல் சாப்பாட்டில் இடைஞ்சல் (4) 4. வானத்தில் கண் சிமிட்டி வெற்றியைப் பறை சாற்றும் (3) 5. வண்டி பாய தான் தாவ ஒழிந்த தமிழரசன் (5) 8. பிழைக்குள் காற்று குறைவாக வீசுதல் தாக்குதலை எதிர்கொள்ளத் தேவை (2,3) 10. பரப்பு, உறுதியான சொல் வீச்சைப் பெருக்கு (5) 11. திருமண ஜோடிக்குச் சொந்தமான ஊர்? (4) 13. பாசத்தால் பிணைத்து துக்கமளிப்பவன் (3) 15. நீர் வழிக் காமி நீங்கக் குமிழாகாய் (3)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக:1. முற்பிறவி 4. பம்பா 6. திப்பு 7. கண்ணிவெடி 8. ததும்பு 9. ஓவியன் 12. கார் காலம் 14. வாங்கு 16. புதன் 17. திக்குவாய் நெடுக்காக: 1. முந்தி 2. பின்புலம் 3. விக்கல் 4. பரணி 5. பாண்டியன் 8. தற்காப்பு 10. விரிவாக்கு 11. தம்பதி 13. காலன் 15. குழாய் |
|
|
|
|
|
|
|