Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | வாசகர்கடிதம் | அஞ்சலி | பொது
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |அக்டோபர் 2023|
Share:
'Make in India' என்று மோதி அரசு தொடங்கிய மக்கள் இயக்கம், தன்னம்பிக்கையும் தற்சார்பும் கொண்ட பாரதத்தை நோக்கிய வீறுநடையைப் பல துறைகளிலும் விரைவு படுத்தியுள்ளது. தேஜஸ், வந்தே பாரத் போன்ற விரைவு ரயில்கள் ரயில் பயணத்தின் அடையாளத்தையே மாற்றியதோடு, பிற நாடுகளிலும் இந்தப் பெட்டிகளை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதை எழுதும்போது பாரதம் சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் காணாத எண்ணிக்கையில் மொத்தம் 76 (தங்கம் 16, வெள்ளி 28, வெண்கலம் 32) பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் இந்திய விண்கலம் சென்றிறங்கியதையும் இங்கே நினைவு கூரலாம்.

இதன் இன்னொரு முகத்தை 'Vaccine War' திரைப்படம் காண்பிக்கிறது. சிறந்த பயன்தரும் வேக்ஸின்களை உள்நாட்டில் தயாரித்து, பாரத மக்களுக்கு முதன்மை கொடுத்து இலவசமாகவும், கட்டுப்பாட்டு விலையிலும் தாமதமின்றிச் செலுத்தி, பெருந்தொற்றுப் பரவலை நிறுத்தியதோடு, உலகின் பிற ஏழை நாடுகளுக்கும் இலவசமாக மில்லியன் கணக்கில் வழங்கியது மோதி அரசின் மனிதநேயம் சார்ந்த ஓர் அசுர சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை போன்றவை வளர்ந்த வல்லரசு நாடுகளின் கைப்பாவையாக இருந்து வரும் நிலையில், பாரதத்தில் நடந்த ஜி-20 மாநாட்டின் போது, 57 ஆப்பிரிக்க நாடுகள் சேர்ந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தை இதன் உறுப்பினராக்கி, பிற்பட்ட நாடுகள் மீது கொண்ட அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தியது இந்தியத் தலைமை. ஒரு காலிஸ்தானியர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டின் பிரதமர், எந்த ஆதாரமும் இன்றி இந்தியாவின் மீது பழிபோட்டதை அடுத்து இந்திய அரசு எடுத்து வரும் அரசுரீதியான நடவடிக்கைகளும் முன்னர் கண்டிராத, தன்னம்பிக்கை கொண்ட புதிய பாரதத்தை அடையாளம் காட்டுவனவாகவே உள்ளன. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளைக் கொண்டவள் பாரதமாதா என்பது உறுதிப்பட்டுக்கொண்டே வருகிறது.

★★★★★


இந்தப் புதிய பாரதத்துக்கு உரமூட்டுபவர்கள் நாகராஜன் பிச்சுமணி (நேர்காணல்) போன்ற, தொழில்நுட்பத்தை நாட்டின் மலர்ச்சிக்குப் பயன்படுத்தத் துணிந்த, தன்னலமற்ற இளையோர்தாம். அவரது நேர்காணல் நெஞ்சில் உற்சாகத்தைப் பற்ற வைப்பது. ஸ்ரீ நரசிம்ம சுவாமிகளின் வரலாறு இவ்விதழில் நிறைவடைகிறது. சிறுகதை, இளம் சாதனையாளர் போன்றவையும் மனதில் மகிழ்ச்சிச் சாரலை வீசுவனதாம்.

வாசகர்களுக்குப் பண்டிகைக்கால வாழ்த்துக்கள்!
தென்றல்
அக்டோபர் 2023
Share: 




© Copyright 2020 Tamilonline