|
ஹ்யூமர் கிளப்பில் கேட்டவை |
|
- ஸ்ரீகோண்டு|டிசம்பர் 2002| |
|
|
|
ஹ்யூமர் கிளப்பில் கேட்ட கொஞ்சம் பழைய கடி :
நேரு மாமாவிற்குப் பிடித்த நடிகை யார்?
ரோஜா.
******
பிரபாகரனுக்கு பிடிக்காத குளியல் சோப் எது?
சந்திரிகா
சந்திரிகாவிற்கு பிடிக்காத சீயக்காய் பொடி எது?
புலி மார்க் சீயக்காய்த்தூள்
******
அணில், புறா - இரண்டிடத்திலும் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினால் எது முதலில் போய்ச் சேரும்?
அணில், அது முதுகுல தான் பின்கோடு இருக்கே!
******
காட்டில் இருக்கும் வீரப்பனுக்குப் பிடித்த சோப் எது?
மைசூர் Sandal சோப்.
******
ஏசுபிரான் ஏன் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்.
ஏன்னா அந்த காலத்தில் எல்லாம் காலிங் பெல் கிடையாது. அதனாலதான்.
******
பிரெட் விக்கறவர், தன் பெண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுப்பார்?
'ஜாம் ஜாம்'ன்னு.
******
என்னங்க! தோ போறாரே நம்ம பக்கத்து வீட்டுக்காரர். அவர் பார்த்து, ஹலோ டானியல்னு சொல்லி விஷ் பண்ணேன். பதிலுக்கு அந்த ஆள் முறைக்கிறார்.
அடியேய், டானியல் என்கிறது அவங்க வீட்டு நாயோட பெயர். முறைக்காம, வேற என்ன செய்வாங்களாம்.
போச்சு போங்க, நம்ம பொண்ணு ஆல்பர்ட் வீடு, ஜேம்ஸ் வீடுன்னு சொல்றச்சே, எனக்கு அதெல்லாம் அந்த, அந்த வீட்டு நாயோட பேருன்னு தெரியாதுங்க. அதான் எல்லோரும் என்ன ஒரு மாதிரி பார்த்தாங்க போலிருக்கு
******
வானொலி நிகழ்ச்சியில் 'பாட்டி வைத்தியம்'
மொதல்ல வெந்நீரை மைக்ரோவேவில் சூடு செய்ய வேண்டும். பிறகு கொஞ்சம் பூண்டை நான்ஸ்டிக் frying panல் வதக்க வேண்டும். பிறகு 'Real Lemon' எலுமிச்சை சாறில் ஒரு டீஸ்பூன் விட்டு கலக்கி....
கேட்ட நம்மாளோட கமெண்ட் : என்னடா, பாட்டி foreign பார்ட்டி போலயிருக்குது!
****** |
|
நண்பர் வீட்டு விருந்தில்.....
என்னமா கண்ணு, உன் பிரெண்டு லதா, உனக்கு அல்வா கொடுத்தாளாமே. அப்படியா?
திருநெல்வேலி போய் வந்த யாரோ கொண்டு வந்தாங்களாம். ஆமா அதுக்கு எதுக்கு எல்லார் எதிரேயும் கத்தி சொல்லற. கேக்கறவங்க எப்படி நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாங்க பாரு. நீ நினைக்கிற அந்த அல்வா நிச்சயமாயில்ல. போடா டேய்.
******
சிறுவர்களின் கிருஷ்ணலீலா நாட்டிய ஒத்திகையின் போது......
சிறுனிடம் கண்ணா, நீ குமார் மேல (கம்சன் மேல) ஏறி உக்கார்ந்து குத்தறமாதிரி நடிக்கணும். சரியா.
சிறுவன் நான் மாட்டேன், அவன் என் பிரண்டு. இதோ இருக்கானே, கணேஷ் அவனைக் குத்தறேன்.
டேய் கண்ணா, அப்படி செய்யக்கூடாதுப்பா. கணேசும் ஒரு கிருஷ்ணன்.
கேட்ட நம்மாளோட கமெண்ட் : டைரக்டர் பாடு அதோ கதி தான்போல.
******
ஏண்டா, இந்த ஊருல பொறந்து வளருகிற நம்ம பசங்க தொல்ல தாங்கலன்னு சொல்ற?
வீட்டி முடிஞ்ச வரைக்கும் என் பசங்களோட தமிழ்லதான் பேசறேன்.
ஆனாக்க, முக்கால் வாசி நேரம், தமிழில பேசி, அதுங்களுக்கு விளங்காம, இங்கிலீஷ்ல அர்த்தம் சொல்லி புரிய வைக்கிற கொடுமையைத்தான் சொல்றேன்.
எங்கப்பா அன்னிக்கே அடிச்சிட்டாரு, ஆரம்பத்திலிருந்தே தமிழ்ல பேசுன்னு. நான் கேக்கல.
******
என்ன மச்சி, எக்கானமி தேறி, மக்களோட spending அதிகரிச்சுடுத்துன்னு எல்லோரும் பேசிக்கிறாங்க?
எல்லாம், உடான்சுடா. இது ஹாலிடே சீசனில்ல. அப்படி சொன்னாலாவது, மக்கள் நிறைய வாங்குவாங்கன்னுதான்.
வரையா, நீயும் நானும் போய், ஒரு 200 டாலர் செலவு பண்ணி எக்கனாமியை நிமிர்த்தலாம்.
பிராஜக்டு எக்ஸ்டென்ஷன் வாங்கித்தறதானா. ஒ.கே. நான் ரெடி.
ஸ்ரீகோண்டு |
|
|
|
|
|
|
|