|
|
ஜட்ஜ் : எதுக்கு அந்த நகைக் கடைக்கு தொடர்ந்து இரண்டு தடவை திருடப் போன?
திருடன் : வந்துங்க எஜமான், மொதல் தரம் திருடிக்கிட்டு போன மோதிரம், என் பொண்டாட்டி விரலுக்கு பத்தலீங்கய்யா.
******
திருடன் : நான் திருடும்போது, யார் பாத்தாங்களோ அவங்கள குத்தாம விடமாட்டேன். ஆனா குத்தறத்துக்கு முன்னாடி பேரக்கேட்டுத் தெரிஞ்சுக்கறது என் வழக்கம். இந்தாம்மா உன் பேரென்ன?
பெண் : என் பேரு கீதா
திருடன் : எங்க அம்மா பேரும் கீதாங்கறதுனால உங்க ரெண்டு பேர்ல உன்னமட்டும் குத்தாம விடறேன். யோவ் உன் பேரு என்னய்யா?
ஆண் : என்ன கூட, என் பிரண்ட்ஸ் எல்லாம், கீதான்னுதான் கூப்பிடுவாங்கபா!
****** |
|
வக்கீல் : அந்த நடிகை வீட்டுல திருட ஒரு மாசமா பிளான் பண்ணியும், ஒரு சின்ன தப்புனால மாட்டிக்கிட்டியா.
திருடன் : ஆமாய்யா. நான் அவங்க வீட்டு நாய்க்கிட்ட பழக்கம் பண்ணிட்டு, திருடப் போன போது தெரியாம, நடிகை வீட்டு பூனைக் கால மிதிச்சிட்டேங்க.
******
திருடன் : வக்கீல் அய்யா! ரொம் நன்றிங்க. அந்த கொள்ளை கேசிலிருந்து, சூப்பரா என்ன காப்பாத்திட்டீங்க. நான் அப்புறமா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்.
வக்கீல் : சரி! சரி! ராத்திரியா இல்லாம, நான் வீட்டில இருக்கும் போது வா.
ஸ்ரீ கோண்டு |
|
|
|
|
|
|
|