Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | சிறுகதை
சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
அமெரிக்க அனுபவம்
ஒரு தந்தையின் முதல் அமெரிக்கப் பயணம்...!
- டி.எம். ராஜகோபாலன்|ஜனவரி 2001|
Share:
விமானம் 'San Francisco' வந்து இறங்கியதும் அசதியும் கவலையும் என்னை ஆட்கொண்டது. நீண்ட பயணம். கொண்டுவந்திருக்கும் பொடிகளையும் ஊறுகாய்களையும் அவரவர் வீட்டில் சேர்க்கவேண்டுமே என்ற கவலை.

முன்பாகவே என் நண்பர்கள் அறிவுரை கூறியிருந்தார்கள் - Customs இல் "any edible items?" என்று கேட்டால் இல்லை என்று சொல்ல வேண்டும் என்று..! அது என் மனதில் உறுதியாக நின்றது. அதே போல "any food" என்ற கேள்விக்கு "No Please" என்று சொல்லி பெட்டியை Counter-லிருந்து நகர்த்தும்போதே பெட்டியின் zip கழன்று உள்ளே இருந்த ஊறுகாய் பாட்டில் என்னை எட்டிப் பார்த்தது. பெட்டியை மூடி வெளியே கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

சில மாதங்களுக்கு பிறகு இங்கு உள்ள இந்திய கடைக்கு செல்லும் பொழுது அங்கு எல்லாவித பொடிகளும் ஊறுகாய்களும் இருப்பதை பார்த்தேன். இனிமேல் யார் US வந்தாலும் அவர்களிடம் பொடி ஊறுகாய் கொடுத்தனுப்பும் வழக்கத்தை விட தீர்மானித்தேன்.

நான் இங்கு வந்து 6 மாதம் முடிய போகிறது. மூன்று மாதம் என் இளைய மகள் வீட்டில் Chicago வில் தங்கியிருந்தேன். "Town Home" என்று சொல்லப்படும் வீடு. வாசலில் நிறைய பூச்செடிகள் . அவற்றிர்க்கு தண்ணீர் விடவேண்டுமென்று எனக்கு ஆசை. ஒரு நாள் மதியம் என் மகளும் மருமகனும் அலுவலகம் சென்ற பிறகு "Hose Pipe"ஆல் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன். உள்ளே என்னை காணாத என் மனைவி வேகமாக ஓடி வந்து கதவை திறந்து வெளியே வந்தாள்.

"என்ன தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறீர்களா, எங்கே எல்லாம் தேடுவது என்றாள்? "

இருவரும் திரும்ப வீட்டிருக்குள் செல்ல கதவை திறக்க முயன்றோம் , அப்போதுதான் தெரிந்தது அது "Automatic Lock" என்று.

நான் பூஜை செய்து விட்டு சென்னை பாணியில் வேட்டியும் திருநீறுமாக நின்று கொண்டிருந்தேன்.

என்னுடைய மகள் மருமகனின் தொலைபேசி எண்கள் வீட்டிற்குள் இருந்தன. ஒரு மணி நேரம் குழம்பிய பிறகு என்னுடைய மகளின் தோழியை தேடி "Train Station" ல் சென்று அவள் வருகைக்கு காத்திருந்து, விவரம் கூறி , "Lock Smith" யை கூப்பிட்டு அவள் உதவியுடன் பூட்டை உடைத்து வீட்டிற்குள் செல்ல இரவாகி விட்டது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

பிறகென்ன..!அன்றிலிருந்து நாங்கள் Chicago வில் படிதாண்டாத பதி-பத்தினியாகி விட்டோம். Chicago வில் Sears Towers, DownTown எல்லாம் பார்த்தாகி விட்டது. ஆனால் மனதில் நின்றது Dewon Street 'மசால் தோசை' தான். சென்னையில் 25ருபாய் கொடுத்து சரவண பவனில் தோசை சாப்பிடும் போது பணத்தை செலவழித்த கவலை இருக்கும்.
ஆனால் இங்கு $8 கொடுத்து சாப்பிட்டாலும் அதன் சுகமே தனி தான்.

US வந்த பிறகு முடி திருத்தும் "Salon" பக்கமே செல்லவில்லை. என் மகள் ஒரு வழியாக ஒரு நாள்

"Hair Cut"க்கு அழைத்து போனாள். கட்டணம் $12 இருந்த போதிலும் "Senior Citizen" என்று அதற்கு 25% தள்ளுபடி செய்தார்கள். இச்சலுகை நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

சென்னையில் வழக்கமாக நான் செல்லும் முடிதிருத்துபவர் "என்ன இந்த ஆளை 6 மாதமாக காணவில்லை" என்று நினைத்து நொந்திருப்பார்.

இங்கு சாலை விதிமுறைகள் மிக கடுமையாக இருக்கிறது. சிறு தவறுகளுக்கு கூட "Cops" பிடித்துவிடுகிறார்கள். இந்தியா போல ஐந்தோ பத்தோ கொடுத்து தப்பிக்க முடியாத கா¡¢யம். உண்மையாகவே போலீஸ்காரர்களுக்கு நல்ல மதிப்பு.

நிறைய இடங்கள் பார்த்தாலும் "Las Vegas" அனுபவம் மட்டும், மறக்க முடியாதது. என் மகனுடைய நண்பா¢ன் பெற்றோர்களும் எல்லா இடங்களும் பார்த்துவிட்டு கடைசியாக "Las Vegas" சென்றார்களாம். அங்கு, அவனுடைய தந்தை, வண்ண வண்ண விளக்குகளையும், 'Casino' மெகா நிகழ்ச்சிகளையும் பார்த்துவிட்டு "இதுதான்டா அமொ¢க்கா" என்று தன் மகனிடம் கூறினாராம். '5 cent' டோ அல்லது '25 cent' டோ, எதை போட்டாலும் 'கலகல' என்று கொட்டும் நாணயத்தின் சத்தம் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது? "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் " என்ற தமிழ் பாடல்தான் ஞாபகத்திற்கு வந்தது.

'Casino' க்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்கு என்ன அழகான பெயர் "The Strip" என்று? - நம்மைப் பணமில்லாமல் உரித்துவிடுவதால் போலும்..!

எனக்கு ஒரே ஒரு வருத்தம். அமொ¢க்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொ¢ந்துகொள்ளாமல் இந்தியா திரும்புவதுதான். அமொ¢க்காவில் 'வோட்டு' போட்டுவிட்டு அதை எண்ணுவதில் தான் பிரச்சினை. பாவம் அவர்களுக்கு நமது ஊர் லல்லு பிரசாத் யாதவை தொ¢யாது போலும் ? அவரை கேட்டிருந்தால் மக்கள் 'வோட்டு' போடாமலே, எப்படி ஜெயிக்கலாம் என்று சொல்லிகொடுத்திருப்பாரே!...

ஆ-ர்: இப்போது அமெரிக்கத் தேர்தல் முடிவு தெரிந்துவிட்டது, இக்கட்டுரை ஆசிரியருக்கு தெரிந்திருக்கும்..! வாசக அன்பர்களே, இது போன்ற அனுபவங்களை, நீங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே..! வீட்டில், உங்கள் பெற்றோர்கள் மற்றும், மனைவி/வீட்டுக்காரரின் பெற்றோர்களுக்கும், தங்கள் அனுபவித்த சுகமான, சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, இது ஒரு அருமையான வாய்ப்பு...!

T.M.ராஜகோபாலன்
Share: 




© Copyright 2020 Tamilonline