|
|
|
சிறகுகள் விரியுமோ மலர்களும் மலருமோ கதவுகள் திறக்குமோ!
அதிகாலை நீண்ட அமைதியால் பறவைகள் கூட்டுக்குள் உறக்கம். மழலைகள் இல்லாத பள்ளியால் சோலையும் பூத்திட மறுக்கும்.
வேலைகள் ஏதுமின்றி கடைவீதிகள் வெறிச்சோடும். மனிதர் காலடித் தடமின்றி கடல் அலையும் கரையும் உரையாடும்.
வாழ்வின் ஓட்டம் தடுத்தே இயற்கை நடத்தும் இந்தப் பாடம். இடைவெளி விட்டு நின்றும், இழந்தோர்க்குத் தோள் கொடுப்போம்.
முகக்கவசம் எங்கும் அணிந்தே சுய ஒழுக்கம் மூலம் வெல்வோம். அறிவின் துணையுடன் நின்றே இந்தப் பகைவனை முழுதாய் கொல்வோம்.
சிறகுகள் விரிந்திடும் மலர்களும் மலர்ந்திடும் கதவுகள் திறந்திடும். |
|
செந்தில் தனகோடி, வாஷிங்டன் டி.சி. |
|
|
|
|
|
|
|