|
|
|
அருகில்தானே இருக்கிறோம், போனால் ஆச்சரியப்பட்டு ஆனந்தமடைவாள் என்று அழையா விருந்தாகத் தோழி வீடு சென்றேன், ஆஹா என்றழைத்து அன்பாய்த் தேநீர் தந்தாள். பேசப் பேசச் சுமைகள் குறைந்தன. "அவ்வப்போது இப்படிச் சந்திக்க வேண்டும் அதிகாரபூர்வ அழைப்பின்றி" என்றாள். "எனக்காகக் கடைக்குச் சென்று வாயேன்" என்று மகனை அனுப்பினாள்.
நேரம் காலம் புரியாமல் வந்து, வேலை கெடுத்து நேசம் கொண்டாடுகிறோமோ - ஒரு குழப்பம். முடிந்து விடைபெற்றுக் கிளம்பினேன்! காரைத் திருப்பிவிட்டு வாசலைப் பார்த்தேன். கதவருகில் நின்று கனிவாய்க் கையசைத்தாள், தீர்ந்தது குழப்பம்! |
|
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
|
|
|
|
|