|
|
|
|
நான் சொன்ன கதையை தன் தங்கைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் சொல்லும் புதிய கதை ஒன்றை ஆவலுடன் தகப்பன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது!
*****
முதல் ஊதியம்
இந்தாங்ப்பா என்றேன்! அம்மாகிட்ட குடுப்பா என்றார்! உவப்பு இரட்டிப்பானது அம்மா அப்பா நான் எல்லாருக்கும்!
***** |
|
அவள்
நீ நல்லாயிருக்கியா எனக் கேட்டேன்? நீ எப்பிடியிருக்கே என்றாள் அவள். நான் நல்லா இருக்கேன் என்றதும் துளிர்ப் புன்னகை! நலமாய் இராதவள் நலமானதைப் போல!
பழமைபேசி, சென்டர்வில், டென்னசி |
|
|
|
|
|
|
|