ஆகாஷ் லக்ஷ்மணன் கார்த்திக் கல்யாணசுந்தரம்
|
|
|
|
|
பாக்ஸ்பரோவில் உள்ள ஆக்டன் பாக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் செல்வி நிவேதா ராம் 2013ம் ஆண்டின் 'அமெரிக்க அதிபர் விருது பெறும் மாணவர்'களில் (The US Presidential Scholars) ஒருவராகத் தெரிவுபெற்றுள்ளார். இந்த ஆண்டில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளிவரப் போகும் மூன்று மில்லியன் மாணவர்களில் 3300 பேர் பரிந்துரைக்கப்பட்டதில் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 141 பேர். கல்விச் சிறப்பு, கட்டுரை, சமூகப் பணி, பள்ளியின் மதிப்பீடு, கலைச்சிறப்பு எனப் பல்வேறு அம்சங்களில் இவர்களின் நேர்த்தி மதிப்பிடப்பிட்டு இந்தச் சிறப்பு வழங்கப்படுகிறது.
நிவேதாவுக்கு இதற்கான அதிபர் பதக்கத்தை அமெரிக்கக் கல்விச் செயலர் திரு. ஆர்னி டங்கன், வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூ எம். மெல்லன் அரங்கில் வழங்கினார். பள்ளியில் நிவேதா அறிவியல், கல்விப் போட்டிகள், இலக்கிய இதழ், சமூகப்பணிக் குழுக்களின் தலைவராக இருக்கிறார். நரம்பியலில் ஆர்வம் நிரம்பிய நிவேதா 2012ல் மாசசூஸட்ஸில் அறிவுத் தேனீ (Brain Bee) சாம்பியன் பட்டத்தை வென்றார். Young Einstein Club, Acton discovery museum, Beyond Benign ஆகிய நிறுவங்களில் தன்னார்வத் தொண்டராக இருக்கிறார்.
பதினெட்டு வயதான நிவேதா, டியூக் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் பட்டம் பயில இருக்கிறார். நிவேதா தனது தாத்தாவை முக்கிய முன்னுதாரணமாகக் கருதுகிறார். அதிபர் விருது குறித்த அறிவிப்பைக் காண |
|
விஜயலக்ஷ்மி ராஜா, ஹூஸ்டன், டெக்சஸ் |
|
|
More
ஆகாஷ் லக்ஷ்மணன் கார்த்திக் கல்யாணசுந்தரம்
|
|
|
|
|
|
|