வினித்ரா சுவாமி சங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்
|
|
மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர் |
|
- |மே 2013||(1 Comment) |
|
|
|
|
|
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் வளாகத்தில் முதுநிலை உயிரியல் பயின்றுவரும் மானஸா சுரேஷ், 2013-14ம் ஆண்டுகளுக்கான ஃபுல்பிரைட் கலை நிதியம் பெற்றுள்ளார். இந்த நிதிய ஆண்டில் அவர் கர்நாடக இசை குறித்து ஆய்வதிலும், கச்சேரிகள் செய்வதிலுமாகச் சென்னையில் செலவிடுவார்.
சுருதி ஸ்வர லயாவின் (ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா) இயக்குனரான அனு சுரேஷ் அவர்களின் மகளான மானஸா, தனது நான்காவது வயதிலேயே தம் தாயாரிடம் இசை கற்கத் தொடங்கினார். 2003ம் ஆண்டிலிருந்து டி.வி. கோபாலகிருஷ்ணன், தேவி நெய்தியார், கே.என். சசிகிரண், சௌம்யா, கிரணாவலி வித்யாசங்கர், நாகை ஸ்ரீராம் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களிடம் இசைக் கல்வியைத் தொடர்ந்த மானஸா, 2008 முதல் பத்மபூஷண் பி.எஸ். நாராயணஸ்வாமியிடம் பயின்று வருகிறார்.
கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை, சிகாகோ தியாகராஜ உத்சவம், பாபநாசம் சிவன் விழா போன்ற பல போட்டிகளில் இவர் கிருதி, ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், ராகம்-தானம்-பல்லவி என வெவ்வேறு பிரிவுகளில் பரிசுகள் வென்றுள்ளார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல அரங்குகளில் கச்சேரி செய்துள்ளார். சுருதி ஸ்வர லயாவில் வாய்ப்பாட்டு கற்பித்தும் வருகிறார். இவரது மாணாக்கர் பலரும் போட்டிகளில் பரிசுகள் பெற்றதுண்டு. |
|
|
|
|
More
வினித்ரா சுவாமி சங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்
|
|
|
|
|
|
|