|
|
தென்றலின் முதலாவது, (டிசம்பர் 2000) தழில், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் நடை பெற்ற குழப்பங்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
அப்படி நடந்திருந்தாலும், அமெரிக்க ஜனநாயகம் வலிமை வாய்ந்தது, சந்தர்ப்பங்கள் ஒரு எல்லை தாண்டிப் போகாது, ஒரு நிலைக்குப் பிறகு, ஒரு வேட்பாளர் பணிவுடன் விலகிக் கொள்வார் என்று எழுதியிருந்தேன்.
நான் என்னவோ சாதாரணமாக எழுதிவிட்டேன், அமொ¢க்க ஜனநாயகத்தின் வலிமையைப் பற்றி. உண்மையில் நடந்தது நான் நினைத்தது யாவையுமே மீறி இன்னும் விசித்திரம் என்றே சொல்ல வேண்டும்!
அய்ய்ய்ய்ய்ய்ய்யோ! அமெரிக்காவில் இத்தனை நீதிமன்றங்களா, இத்தனை வழக்கறிஞர்களா, இவ்வளவு நீதிபதிகளா என்று மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கும் வண்ணம் அல்லோகலப் படுத்தி விட்டார்களே?!
தேர்தல் முடிந்து, முடிவு தெளிவாகத் தெரியவில்லை, நீதிமன்றங்கள் குறுக்கிட வேண்டிய நிலை என்று தொலைக் காட்சியில் சொல்லி வாய் கூட மூடவில்லை... வழக்கறிஞர் கூட்டம், படை திரண்டு, திறந்து வைத்த சர்க்கரைப் பண்டத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல ப்ஃளாரிடா முழுவதும் பரவி விட்டனர்!
வழக்குகளும், தீர்ப்புகளும், இயந்திரத் துப்பாக்கியிலிருந்து சுடப் பட்ட குண்டுகளைப் போல் படு வேகத்தில் குவிந்தன. நிலைமை கடிகாரத்தின் பெண்டுலம் போல் ஒவ்வொரு முறை ஒரு வேட்பாளருக்குச் சாதகமாக மாறி ஆடிக் கொண்டிருந்தது!
ஆனாலும், நான் நினைத்தபடியே, இறுதியில் முடிவு பண்பாட்டுடனும், நாகா£கத்துடனும், அமைதியாகவே இருந்தது. இருந்தாலும், ஒரு ஆச்சா¢யந்தான் - இப்போது குடியரசுத் தலைவராக இருப்பவர் - நாடளவில், குறைந்த வோட்டுகளைப் பெற்று, ஒரு முறையில் தோல்வி அடைந்தவர்! ஆனாலும், அதிக வோட்டுப் பெற்றவரோ, அவரைச் சார்ந்த மற்றவரோ, எந்த விதமான கேள்வியும் அதைப் பற்றி எழுப்பாமல், அரசியல் நிர்ணயச் சட்டத்தின் வரைமுறையைப் பின் பற்றி நடந்து கொண்டனர்!
ஒரு வன்முறையும் நடக்காமல், உயிர்ச் சேதம் ஆகாமல், பொறுமையுடன், பல்வேறு நீதிமன்றங்களின் படிகளை ஏறி இறங்கி, இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் (supreme court) ஒரே ஒரு நீதிபதியின் வோட்டு வித்தியாசத்தில், வோட்டுக்களின் மறு எண்ணிக்கை நிறுத்தப் பட்டு, தேர்தல் திருவிளையாடல் புராணம் முடிந்து விட்டது!
இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தில் இடைச் செருகலாக ஒரு கற்பனைச் சிறுகதை இருந்தது. அதில் இந்தத் தேர்தல் குழப்பங்கள் யாருடைய கைக் கா¡¢யமாக இருக்குமோ என்று எண்ணச் சிறகைப் பறக்கவிட்டிருந்தேன்.
அதில் நமக்கு அறிமுகமான கதா நாயகன் ராம் பல்ராமின் விஷம நடவடிக்கைகள் என்னவாக இருந்திருக்கும்? இப்போது அதைக் கொஞ்சம் கற்பனை உலகுக்குள் மீண்டும் சென்று பார்க்கலாமே! முன்சுருக்கம்:
ப்ஃளாரிடா தேர்தல் மிக நெருக்கமாகிவிட்டதென கவலையுற்றார் கட்சித் தலைவர். எப்படி வெற்றியை சாதிப்பது என்று தவித்துக் கொண்டிருந்த போது திடீரென நுழைந்த ராம் பல்ராம், பிஹாரிலிருந்து இறக்குமதி செய்த தொழில் நுட்பங்களை வைத்து அமொ¢க்க வரைமுறைகளை மீறாமலேயே காரியத்தை எப்படி நடத்துவது என விவா¢த்து, கட்சித் தலைவர் அளித்த பணப் பெட்டிகளுடன் ப்·ளாரிடா சென்றான். அப்படி என்னதான் சூட்சும வேலைகள் செய்து ப்ஃளாரிடா தேர்தலை குழப்பியிருக்க முடியும்?
இதோ படியுங்கள் ராமின் திருவிளையாடல் படலங்களை!
(இனி வரப் போவது ஒரு விளையாட்டுக் கற்பனையே. இப்படித்தான் நடந்ததாக நான் கருதுவதாக எண்ணி விட வேண்டாம்!)
"...உச்ச நீதி மன்றத் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. புதிய ஜனாதிபதிக்கு என் நல்வாழ்த்துக்கள் ..." தோல்வியுற்ற வேட்பாளர் கண்ணியமாக பேச்சளித்து விலகிக் கொண்டிருந்தார். கட்சித் தலைவருக்கு வாயெல்லாம் பல்! இஞ்சி தின்ற குரங்கைப் போல் இளித்துக் கொண்டு மேசையின் மேல் ஏறி நடனமாடாத குறைதான்!
"வெற்றி நமதே!" குரல் வந்தது அறை வாசலிலிருந்து! கூடவே நுழைந்தான் ராம் பல்ராம். கட்சித் தலைவர் ஆனந்தத்துடன் ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டு விட்டார்! "ராம், முடித்து விட்டாய் ராம், முடித்து விட்டாய்! அற்புதம், அற்புதம்!" அவரால் தன் களிப்பைக் கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியவில்லை!
ஓரளவுக்கு ஆசுவாசப் படுத்திக் கொண்டு ,"ராம், எப்படி, என்ன செஞ்சே, எனக்கு எல்லாம் விவரமாக சொல்லு" எனக் கேட்டார்.
ராம் விவா¢க்க ஆரம்பித்தான். |
|
ப்ஃளாரிடா செல்லும் போது ராம் தன் பாக்கெட்டிலிருந்து பிஹார் பெருந் தலைவர் அனுப்பியிருந்த திட்டத்தை மனத்தில் திரும்ப ஓட்டினான். அதன் சுருக்கம் அவன் மனத்தில் ஒரு மந்திரத்தைப் போல நன்றாகவே பதிந்திருந்தது:
குட்டையைக் குழப்பு அட்டையை அழுத்து
சுபஸ்ய சீக்கிரம் தடங்கல் தீவிரம்
நீதியை நிவர்த்தி
அந்த வினோத மந்திரத்தை இரண்டு முறைமனத்துக்குள் சொல்லிப் பார்த்து பாராட்டிக் கொண்டான் ராம். "ஆஹா, ஆஹா, என்ன இருந்தாலும், தலைவர் தலைவர் தான். சும்மா நம்ம பாட்னா வட்டம் மாவட்டத்துக்கெல்லாம் இந்த மாதிரி அட்டகாசமான மந்திரம் கெடச்சுடுமா என்ன?!"
ப்ஃளாரிடா சென்று சேர்ந்தவுடன் அந்த மந்திரத்தை அமுலாக்குவதில் தீவிர முயற்சியுடன் இறங்கினான் ராம்! தலைவா¢ன் திட்டத்தின் அடிப்படை மிக எளிது: உன் ஆளின் வோட்டை ஏற்று. எதிர் ஆளுக்கு கிடைக்க வேண்டிய வோட்டை இறக்கு. மீதியெல்லாம் மந்திரம் சொல்லும் நுணுக்க வேலைகள்தான்!
ஆரம்பம் குட்டையைக் குழப்பும் படலந்தான். முதலில் அவன் சென்ற இடம் palm beach மாவட்டத்துக்கு. அங்கு எதிர் ஆளுக்கு நிறைய பலம் அதிகம். தேர்தலுக்கு அனுப்பியிருந்த மாதிரி வோட்டை எடுத்துப் பார்த்தான். ஹூம் ... இது சாரிப் படாது. திறந்தான் பணப் பெட்டியை, பரப்பினான் சில பொ¢ய நோட்டுக்களை. மாற்றினான் அந்த வோட்டுக்களை. மிகத் திருப்தி. நிச்சயமாக சில பேராவது குழம்பிப் போய் எதிர் வேட்பாளருக்கு போடுவதாக எண்ணி அந்த இரண்டாவது வட்டத்தில் பதித்து வேறு யாருக்கோ போட்டு விடுவார்கள்.
அடுத்து நடந்தது அட்டை அழுத்தல் படலம். எதிர் கட்சிக்கு பலம் இருக்கும் சில இடங்களிலாவது, நிறைய வோட்டு அட்டைகளை செலாவணியாகமல் செய்ய வேண்டும், அல்லது சில எதிர் வோட்டுக்களை போட விடாமலே செய்ய வேண்டும்.
ராம் மும்முரமாக வேலை செய்து, பணத்தை ஆறாக ஓட விட்டு முக்கியமான இடங்களில் இருப்பதிலேயே மோசமான வோட்டு இயந்திரங்களை பரப்பினான். சில இடங்களுக்கு மிகக் குறைவாக வோட்டு அட்டைகளை அனுப்புமாறு செய்து, பல பேர் வோட்டு போட முடியாமல் செய்தான்.
நல்ல முடிவென்றால் அதை உடனே தொ¢யப் படுத்தி விட வேண்டியதுதானே?! அதுதான் சுபஸ்ய சீக்கிரம். சாதகமான முடிவை அங்கீகாரம் செய்து அறிவித்துவிட்டால், அதை திருப்புவது மிகக் கடினம்.
அதைச் செய்வது ராமுக்கு மிகக் கடினமாக இல்லை. ஒரு சா¢யான நேரத்தில் ஒரு சா¢யான நபா¢டம் இதை சொல்லி வைத்தான். ப்ஃளாரிடா தேர்தல் முடிவை அங்கீகா¢ப்பது அனுகூலமான கையிலேயே இருந்ததால் அது மிகச் சுலபமாக முடிந்து விட்டது.
அப்போதுதான், ராமுக்கு மிக நெருக்கடியான நிலை வந்து சேர்ந்தது. ப்ஃளாரிடாவின் உச்ச நீதி மன்றம் வோட்டுக்கள் மீண்டும் எண்ணப் படலாம் என்று அனுமதியளிக்கவே என்ன செய்வது என்று யோசித்தான். "தடங்கல் தீவிரம்" ஞாபகத்துக்கு வந்தது. இந்தத் தடங்கலை முறியடிக்க ஒரு சிறிது தீவிரச் செயலுக்கு இறங்க வேண்டியதுதான். ஆனால் வரைமுறை மீறக் கூடாது என்ற நிர்ப்பந்தம். சிறிது யோசித்து, பிஹார் தலைவா¢ன் முழுத் திட்டத்தையும் அலசிப் பார்த்தான். வழி பிறந்தது! அமொ¢க்காவில் வன்முறை நடக்கலாம் என்று நிமித்தங்கள் தோன்றினாலே அலறிவிடுவார்கள் என்பதை வைத்துக் கொண்டு, வோட்டுக்கள் எண்ணப் படும் ஒரு அலுவலுகத்துக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தான். அது சிறிது தீவிரமான உடனேயே, அந்த மாவட்ட தேர்தல் குழு மறுஎண்ணிக்கையை நிறுத்தி, கஜினி முகமது போல் வாபஸ் பெற்றது!
கதையை குறுக்கிச் சொல்லி முடித்தான் ராம். கட்சி தலைவருக்கு மஹா ஆனந்தம்! ராமின் கை மேல் படார் என ஒரு high five அடித்தார். ஆனாலும் அவருக்கு ஒரு சந்தேகம் இன்னும் இருந்தது. "ராம், அது என்ன எதோ' நீதியை நிவர்த்தி என்று சொன்னயே அதப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே" என்றார்.
ராமின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை விரிந்தது. "ஆம் நான் சில விவரங்களை மறைத்துவிட்டேன். நீதிமன்றத் தீர்ப்புகள் இறுதியில் சாதகமாயிற்றா இல்லையா? நிறைய தீர்ப்புகள் பல நீதிமன்றங்களிலும் நமக்குதானே வெற்றி. சா¢ப் படாத போதும், அதைவிட உயர் நீதி மன்றங்களில் நிவர்திக்கப் பட்டன அல்லவா?!" என்றான் சிரித்துக் கொண்டு!
அவன் அதப் பற்றி மேலும் எதுவும் சொல்லுவதாக இல்லை என்று புரிந்து கொண்ட தலைவர், "சாரி, வா ராம், நாம் போய் இந்த வெற்றியை நமது கட்சி தொண்டர்களுடன் பலமாக கொண்டாடலாம்" என்று அழைத்துச் சென்றார்.
இத்துடன் ராம் பல்ராமின் புராணம் முடிந்தது. மீண்டும் உண்மை உலகுக்குத் திரும்புவோமா?!
கோர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தேர்தல் வெற்றி புஷ்-க்குத்தான் என்று கூறிய பேச்சு மிகவும் பிரமாதம். அவர் எவ்வளவோ கசப்புடன் பேசியிருக்கலாம். புஷ்-இன் வெற்றி உண்மையானதல்ல, உச்ச நீதி மன்றம் அரசியல் காரணத்தால் மறு எண்ணிக்கையைத் தடுத்து விட்டது என்றெல்லாம் பேசி விஷக் காற்றை வீசியிருக்கலாம்.
நாடளவில் தான் அதிக வோட்டுக்களைப் பெற்றதை பற்றி பேசியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதுவுமே செய்யவில்லை. நான் எதிர் பார்த்ததையும் விடவே மிக்க கண்ணியத்துடன் பாராட்டி, ஒற்றுமைக்கும் புதிய ஜனாதிபதிக்கு உதவி செய்யுமாறும் கோரிக்கை கேட்டுக் கொண்டு ஒதுங்கி விட்டார்.
அரசாங்க வேலைகளூம், ஜனாதிபதி மாற்ற நடவடிக்கைகளும் தேர்தல் எப்போதும் போல மிகச் சாதாரணமாகவே நடந்து முடிந்ததைப் போல ஒரு தடங்கலும் இன்றித் தொடர்ந்து நடந்தன.
இதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் பெரும் சக்தி.
இதிலிருந்து இந்திய மக்களும், இந்திய அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ளவேண்டியது பல உண்டு. ஆனால் அவற்றில், மிக முக்கியம் என்று கருதுவது, சட்ட வரைமுறைகளுக்கும், அரசியல் நிர்ணயச் சட்டத்துக்கும் அமொரிக்காவில் இருக்கும் மதிப்பு ஒன்று. மற்றது, எவ்வளவு முக்கியமான கருத்து வேறுபாட்டானாலும், வன்முறை, கொலை என்று கொண்டு சேர்க்காமல் கண்ணியத்துடன் பேச்சாலும், நீதிமன்றத் தீர்ப்பாலும் முடித்தது.
நான் போன முறை கூறியது போல், பாரதத்திலும், மக்கள் கல்வியும் பொருளாதார நிலையும் முன்னேறும் பட்சத்தில் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும், முடியும் என்பது என் மனமார்ந்த கோரிக்கை, மேலும் நம்பிக்கை!
வாழ்க பாரதம், வளர்க நம் குடியரசு!
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|