திருவள்ளுவர் ஆண்டு ஊனமுற்ற குழந்தைகளின் சேவையில் 'அம்ரித்'
|
|
ஞானக்கூத்தனுக்கு 'விளக்கு' விருது |
|
- |ஜனவரி 2006| |
|
|
|
விளக்கு அமைப்பின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருதைக் கவிஞர் ஞானக்கூத்தன் பெறுகிறார். விருதின் நடுவர்களான பெருமாள் முருகன், எஸ். ஆல்பர்ட், சி.மோகன் ஆகியோரின் ஒருமித்த பரிந்துரையின் பேரில் ஞானக்கூத்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக் கும் மேலாகத் தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களித்து வருகிறார். கவிதை, விமர்சனம், பத்திரிகை எனப் பல துறைகளிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார். தமிழ், சமஸ்கிருத இலக்கிய மரபுப் புலமையின் பின்னணியோடு புதுக்கவிதைகளைக் கண்ட படைப்பாளர்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் உயிரோட்டமாகக் கிடக்கும் படைப்பாளி களையும், படைப்புகளையும் பரவலாக அறியச் செய்யும் விளக்கு இலக்கிய நிறுவனத்தின் நோக்குக்கு மிக உகந்ததாக அமைகிறது இந்தத் தெரிவு. |
|
விளக்கு நிறுவனத்தின் இந்தியத் தொடர்பாளர் வெளி ரங்கராஜன். பரிசளிப்பும் பாராட்டுவிழாவும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளன.
நா. கோபால்சாமி அமைப்பாளர், 'விளக்கு' மேரிலாந்து. |
|
|
More
திருவள்ளுவர் ஆண்டு ஊனமுற்ற குழந்தைகளின் சேவையில் 'அம்ரித்'
|
|
|
|
|
|
|