விஷ்ணுபுரம் விருது நல்லி திசை எட்டும் விருது
|
|
மதுமஞ்சரிக்கு விருது |
|
- |செப்டம்பர் 2024| |
|
|
|
|
ஆகஸ்ட் 2024 மாத இதழில் தென்றலுக்கு நேர்காணல் அளித்திருந்த ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கச் செயல்வீரர் மதுமஞ்சரி, 'தோஷி வீ நோ' (Doshi we Know Award) விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமூக மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபடும் இளையோருக்கான மதிப்புமிக்க தேசிய விருது இது.
பாலகிருஷ்ண விட்டல்தாஸ் தோஷி எனப்படும் பி.வி. தோஷி, இந்தியாவின் புகழ்பெற்ற மரபுவழி கட்டடக் கலை அறிஞர். தற்காலத்தின் புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுனர்கள் பலரும் தோஷியின் மாணவர்கள் அல்லது அவரது சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்கள். பி.வி. தோஷியின் பெயரால் செயல்படும் 'DOSHI WE KNOW' அமைப்பு, இந்திய அளவில் மிக முக்கியமான தன்னார்வலர் கூட்டமைப்பு. ஆண்டுதோறும் சமூகப் பொறுப்புடன் இயைந்த கட்டடக்கலையை கைக்கொண்டு செயல்புரியும் நபர் ஒருவரை, இந்திய அளவில் தேர்ந்தெடுத்து இவ்வமைப்பு கௌரவித்து வருகிறது.
அந்த வகையில், 2024-வது ஆண்டுக்காக ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் சார்பில் மதுமஞ்சரி இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளார். மலைக்கிராமக் கிணறுகள் மீட்டெடுப்புக்காக்க 'Doshi Fellowship Award', ஊக்கத் தொகையாக ரூபாய் மூன்று லட்சம் வழங்குகிறது. இந்தியக் கட்டடக்கலையின் வளரிடமான அஹமதாபாதில் உள்ள CEPT பல்கலைக்கழக்கத்தில் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. |
|
மதுமஞ்சரிக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள் |
|
|
More
விஷ்ணுபுரம் விருது நல்லி திசை எட்டும் விருது
|
|
|
|
|
|
|