தெரியுமா?: கான் அகாடமி: தமிழ் இணையதளத் திறப்பு விழா தெரியுமா?:TNF ஆண்டுவிழாவில் தமிழக ஆளுநர் பாராட்டு
|
|
தெரியுமா?: தமிழக அரசின் விருதுகள் |
|
- |மார்ச் 2019| |
|
|
|
|
2017, 2018ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது கவிஞர் மதன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் 'பிரிபொறி' மென்பொருளுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானிற்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது முருகேசனுக்கும், சொல்லின் செல்வர் விருது ஆவடிக் குமாருக்கும், ஜி.யு. போப் விருது சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப் புலவர் விருது பேராசிரியர் நசீமா பானுவிற்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு. செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது முனைவர் உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா. வீரமணிக்கும் வழங்கப்படுகிறது. தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் விருதுத் தொகையுடன், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகள் பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படுகின்றன.
2018ம் ஆண்டிற்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள் எழுத்தாளர் யூமாவாசுகி, லட்சுமண ராமசாமி, மு. சீனிவாசன், எழுத்தாளர் ஜி. குப்புசாமி, மருத்துவர் சே. அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ. செந்தில்குமார் (எ) ஸ்ரீ கிரிதாரிதாஸ், முனைவர் பழனி. அரங்கசாமி, எழுத்தாளர் எஸ். சங்கர நாராயணன், நிலா ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படுகின்றன |
|
2018ம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாரதிதாசனுக்கும், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச்சேர்ந்த சச்சிதானந்தத்துக்கும் வழங்கப்படுகின்றன.
இது தவிர்த்து மாவட்டங்களில் தமிழ்ப் பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வரும் தமிழார்வலர்களுக்கு "தமிழ்ச் செம்மல் விருது" வழங்கப்படுகிறது. தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் விருதுத் தொகையுடன் தகுதியுரை மற்றும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுவர். |
|
|
More
தெரியுமா?: கான் அகாடமி: தமிழ் இணையதளத் திறப்பு விழா தெரியுமா?:TNF ஆண்டுவிழாவில் தமிழக ஆளுநர் பாராட்டு
|
|
|
|
|
|
|