Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: Indiaspora பாராட்டு விழா
தெரியுமா?: பத்ம விருதுகள்
- செய்திக்குறிப்பிலிருந்து|பிப்ரவரி 2017|
Share:
இந்திய அரசின் உயரிய சிவிலியன் விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 75 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும், 7 பேர் பத்மபூஷணுக்கும், 7 பேர் பத்மவிபூஷண் விருதிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் பெண்கள். இதில் NRI உட்பட 7 பேர் வெளிநாட்டினர். ஒன்பது பேருக்கு மறைவுக்குப்பின் இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

பத்மஸ்ரீ விருதினை டி.கே.மூர்த்தி, மாரியப்பன் தங்கவேலு, விராட் கோஹ்லி, சாக்‌ஷி மாலிக், சேகர் நாயக், தீபா கர்மாகர், தீபா மாலிக், அனுராதா பட்வால், அமரர் சுனிதி சாலமன், களரி மீனாட்சி அம்மா, செம்மஞ்சேரி குஞ்ஞிராமன் நாயர், பாரசாலா பி. பொன்னம்மாள், கோடேஸ்வரம்மா, ஜிதேந்திர நாத் கோஸ்வாமி, நிவேதிதா ரகுநாத் பீடே, பாரதி விஷ்ணுவர்தன், இம்ரான் கான் (அமெரிக்கா), ஆனந்த் அகர்வால் (அமெரிக்கா), எச்.ஆர். ஷா (அமெரிக்கா) உள்ளிட்ட பலர் பெறுகின்றனர்.

பத்மபூஷண் விருதை பண்டிட் விஸ்வமோகன் பட், பேராசிரியர் தேவி பிரசாத் திரிவேதி, நிரஞ்சனாநந்த சரஸ்வதி, ரத்னசுந்தர் மகராஜ், தெஹாம்தன் உத்வாடியா, மஹாசக்ரி ஸ்ரீநிதோன் (தாய்லாந்து), அமரர் 'சோ' ராமசாமி ஆகியோர் பெறுகின்றனர். ஈஷா யோகா சத்குரு ஜக்கி வாசுதேவ், பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், சரத் பவார், முரளி மனோகர் ஜோஷி, உடுப்பி ராமச்சந்திர ராவ், சுந்தர்லால் பாட்வா (மறைவுக்குப்பின்), பி.ஏ. சங்மா (மறைவுக்குப்பின்) ஆகியோருக்கு பத்மவிபூஷண் வழங்கப்படுகின்றது. விருதும் கேடயமும் கொண்ட இப்பரிசு வரும் மாதங்கள் ஒன்றில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட இருக்கிறது.

More

தெரியுமா?: Indiaspora பாராட்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline