தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை காந்தியும் ஐன்ஸ்டைனும்
|
|
தெரியுமா?: ஐ-போனில் தமிழ் அகராதி |
|
- |அக்டோபர் 2010| |
|
|
|
|
உங்கள் ஐ-போனில் நீங்கள் லிஃப்கோ தமிழ் அகராதியைப் பார்க்க முடியும். இதற்கான ‘செல்லினம்-லிப்கோ அகரமுதலி’யை முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முரசு அஞ்சல், செல்லினம் போன்ற பிரபல மென்பொருள்களைத் தயாரித்தளித்துள்ள முரசு நிறுவனம் இதையும் தயாரித்துள்ளது. “சில விசைகளை மட்டுமே பயன்படுத்தி, ஐ-போன், ஐ-பாட் ஆகியவற்றில் இந்தச் செயலி மூலம் விரைவாகத் தமிழ்ச் சொற்களைத் தேடியெடுக்க முடியும்” என்கிறார் முரசு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைத் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன்.
லிப்கோ அகராதி தமிழகத்தில் நெடுங்காலமாகப் பிரபலமானது என்பது மட்டுமல்லாமல் சென்ற ஆண்டு முரசு அஞ்சலோடு இணைந்து சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெளியீடு கண்டது.
செல்லினம்-லிப்கோ அகரமுதலி iOS 4.0வைக் கொண்ட ஐ-போன் 3G, ஐ-போன் 3GS, ஐ-போன் 4, ஐ-பாட் டச் 2ஆம் தலைமுறை ஆகியவற்றில் செயல்படும். இந்தச் செயலியை App Store-லிருந்து இறக்கிக்கொள்ள: itunes.apple.com |
|
அதிக விவரங்களுக்கு: sellinam.com |
|
|
More
தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை காந்தியும் ஐன்ஸ்டைனும்
|
|
|
|
|
|
|