ஷியாம் சேதலை ஆதரிப்பீர் தரமான தமிழ் நாடகம் 'காசு மேல காசு'
|
|
AID விரிகுடாக் கிளை வழங்கும் 'சங்கம்' |
|
- |செப்டம்பர் 2002| |
|
|
|
இந்திய மேம்பாட்டுக் கழகம் (Association for India's Development) AID ன் விரிகுடாக் கிளை பண்டிட் விஸ்வமோகன் பட், சித்ர வீணை ரவி கிரண் இணைந்து பங்கு பெறும் சங்கம் என்ற ஜுகல் பந்தி இசை நிகழ்ச்சியினை வரும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி கலி·போர்னியாவின் லாஸ் ஆல்டோஸில் உள்ள ·புட்ஹில் கல்லூரியில் நடத்த இருக்கிறது. (www.aidsfbay.org/sangam/index.html)
கிராமி விருது பெற்ற விஸ்வமோகன் பட் இந்தியர்களிடையே மட்டுமல்ல அமெரிக்கர்கள் மத்தியிலும் மிகப் பிரபலம். மேற்கத்திய இசைக் கருவியான ஹவாயன் கிடாரில் (Hawaiian Guitar) சில மாற்றங்கள் செய்து, மோகன வீணையாக்கி இனிய இந்துஸ்தானி இசையை அதில் மீட்டிக் கேட்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்பவர்.
இளம் சிறுவனாக இசை உலகில் நுழைந்தது முதல் இன்று வரை கர்நாடக இசை உலகில் தனக்கென தனியிடம் பெற்றிருக்கும் சித்ர வீணை ரவிகிரணின் இசையில் மயங்கியவர்கள் ஏராளம் ஏராளம். இந்த இளம் வயதிலேயே 'மில்லெனியம் விருது' உட்படப் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றிருக்கிறார்.
இந்த இரண்டு இசை மோதைகளையும் ஒரே மேடையில் இணைத்து சுப்ரதா பட்டாச்சார்யாவின் தபலாவும், டி.ஹெச். சுபாஷ் சந்திரனின் கடமும் பக்க வாத்தியங்களாய் இனிமை கூட்ட நடைபெற விருக்கும் இந்த ஜுகல் பந்தி நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும் இந்தியவில் AIDன் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக செலவிடப்படும். |
|
இந்தியாவில் உள்ள நூறு பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்டு தற் போது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் Hundred Block Plan (HBP), குஜராத் பூகம்பம் மற்றும் கலவரத்தில் பாதிக்கப் பட்டோருக்கு உதவி, குஜராத்தில் கிணறுகள் வெட்டி நீர்ப்பாசனம் செய்ய உதவி புரியும் ஆனந்தி திட்டம், மகாராஷ்டிராவில் சிறு குழந்தைகளுக்குப் புதிய முறையில் கல்வி அளிக்கும் வனஸ்தலி அமைப்பின் திட்டம், ஆந்திராவில் ஆதி திராவிட மக்களுக்குக் கல்வி அளித்து மேம்படுத்தும் கூந்த் திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் AID செயல்பட்டு வருகிறது.
இது போன்ற திட்டங்களுக்கான நிதி அனைத்தும் இசை நிகழ்ச்சிகள் மூலமும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடை மூலமும் திரட்டப்படுகிறது.
இசை அன்பர்களே, 'சங்கம்' நிகழ்ச்சியின் இனிய இசையை கேட்டு மகிழவும், AID உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கவும் தயாராகி விட்டீர்களா?
நீங்களும் இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தவும், வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்யவும் உதவலாமே! உங்களை வரவேற்க AID ஆவலுடன் காத்திருக்கிறது. |
|
|
More
ஷியாம் சேதலை ஆதரிப்பீர் தரமான தமிழ் நாடகம் 'காசு மேல காசு'
|
|
|
|
|
|
|