Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா
- ஜோசஃப் சௌரிமுத்து|ஆகஸ்டு 2018|
Share:
செப்டம்பர் 8, 2018 சனிக்கிழமை அன்று தென் கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த் திருவிழா அருட்தந்தை. ஆல்பர்ட் பிரகாசம் நிர்வகிக்கும் டிவைன் சேவியர் பங்கு தேவாலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மாலை மூன்று மணியளவில் வந்திக்கத்தக்க ஆயர். ஜோசப் V. பிரென்னன் அவர்களுக்கு ஆலய வளாகத்தில் அமெரிக்க இந்தியர்களின் தொல் நடனத்துடன் (Aztec dance) வரவேற்பு அளிக்கப்படும். அதன்பின், அன்னையின் திருவுருவம் தாங்கிய கொடி புனிதப்படுத்தப்பட்டு ஏற்றப்படும். மாதாவின் திருவுருவம் தாங்கிய தேர் பவனி திருச்செபமாலையுடனும், புகழ்ப் பாடல்களுடனும் பக்தியுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேவாலய மேடையில் வைக்கப்படும்.

மாலை 5 மணியளவில், இந்தியக் கலாச்சாரப்படி ஆயர் அவர்களுக்கும் அருட்தந்தையர்களுக்கும், பக்தர்களுக்கும் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மாதாவின் மகிமைக்காகவும், நன்றியறிதலாகவும், பக்தர்களின் நலனுக்காகவும் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்படும். குணமளிக்கும் திருத்தைலம் பூசுதல் மற்றும் திவ்ய நற்கருணை ஆசீருடன் சுமார் 7 மணியவில் திருப்பலி நிறைவடையும்.
திருவிழா நல்ல முறையில் நடைபெற வேண்டுமென்று, ஆகஸ்ட் 30 முதல், செப்டம்பர் 7 வரை அன்னையின் அருள்வேண்டி ஒன்பது நாட்கள் சிறப்பு வேண்டுதல் நவநாள், தொலைபேசி வழியாக இரவு 8 மணியளவில் நடைபெறும். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இந்திய உணவும், குளிர் பானங்களும் இலவசமாக வழங்கப்படும்.

மாதாவின் மகிமையை எடுத்துரைக்கும் நாட்டியங்கள், சிறுவர் உரையாடல், இசைக்கருவி மீட்டல் ஆகியவையும் நடைபெறும். இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வருகவென்று அன்புடன் அழைக்கின்றோம்.

பின்குறிப்பு: பிரதி மாதம், முதல் சனிக்கிழமை அன்று, அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவை மகிமைப்படுத்த செபமாலையும், திருப்பலியும் தமிழில் நடைபெறுகின்றன.

விபரங்களுக்கு:
முகவரி: Divine Savior Catholic Church, 610 Cypress Ave, Los Angeles, CA 90065
மின்னஞ்சல்: velankannisocal@gmail.com
தொலைபேசி: 562-972-5981

ஜோசஃப் சௌரிமுத்து,
லாஸ் ஏஞ்சலஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline