டெலவேர்: பொங்கல் விழா சங்கர நேத்ராலயா: 'கான திருஷ்டி'
|
|
|
|
|
இசையை நாடும் இல்லம் ஒவ்வொன்றையும் இசை மேடையாக மாற்றும் 'கர்நாடிக் சேம்பர் கான்சர்ட்' அமைப்பு தனது ஐந்தாவது ஆண்டு விழாவை ஜனவரி 11, 2014 அன்று சாய் மந்திர் அரங்கத்தில் மாலை 2:00 மணி முதல் 6:00 மணிவரை மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளது. இந்திய வம்சாவளிக் குழந்தைகள் கர்நாடக இசை பாடுவதற்கான மேடையை அமைத்துத் தரும் நோக்கத்தோடு திருமதி. பத்மா மோகன் முயற்சியில் சங்கீத ஆர்வலர்கள் சேர்ந்து சிறிய அளவில் வீடுகளில் துவங்கப்பட்டது இவ்வமைப்பு. இது வளைகுடாப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட இசை மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆண்டு முழுவதும் பல இடங்களில் பாட வாய்ப்புக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. விழாவில் பல்வேறு இசைப்பள்ளிகளைச் சார்ந்த பிரபல ஆசிரியர்களின் 150க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்பர். இந்நிகழ்ச்சிக்காகப் பிரபல இசைக் கலைஞரான திரு. நெய்வேலி சந்தானகோபாலன் பல பாடல்களை தொகுத்து, இயற்றி, மெட்டமைத்து தந்துள்ளார். அவர் வளைகுடாப் பகுதிக்கு வந்திருந்தபோது நடத்திய பயிற்சி பட்டறையில் இக்குழந்தைகள் அவரிடமே நேரிடையாகப் இப்பாடல்களைப் பயின்றுள்ளனர். அனுமதி இலவசம் |
|
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More
டெலவேர்: பொங்கல் விழா சங்கர நேத்ராலயா: 'கான திருஷ்டி'
|
|
|
|
|
|
|