Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சிறுகதை | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | பொது
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
மார்ச் 2001 : வாசகர் கடிதம்
- |மார்ச் 2001|
Share:
Click Here Enlargeநான், தென்றல் இதழைக் கடந்த மூன்று மாதங்களாகப் படித்து வருகிறேன். இதழில் சொல்லப்படும் செய்திகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் மிகவும் தரமாக உள்ளன. இதுபோன்ற தமிழ் மாத இதழ், ஸான் ·ப்ரான்ஸிஸ்கோவிலிருந்து வெளிவருவது குறித்து, மிகவும் மகிழ்ச்சி. கையில் புத்தகத்தை வைத்து படிக்கும் உணர்வு, முற்றிலும், வேறுபட்டதாகவும், சுவையாகவும் இருக்கிறது. இந்த உணர்வு, ஈ-பத்திரிகைகளைப் படிக்கும் போது வருவதில்லை என்பது நிச்சயம்.

ராதாகிருஷ்ணன்,கலி·போர்னியா.
******


ஆசிரியர் கவனத்திற்கு,

இன்னும் சில அச்சுப் பிழைகள் இருப்பதை தவிர்க்கலாமே. பக்கங்களின் எண்வரிசை முகப்பில் கொடுத்திருப்பதற்கும், உள்ளே இருப்பதற்கும், வித்தியாசம் இருக்கிறதே. பத்திரிகை, தரமான கருத்துக்களையும், கதைகளையும் கொண்டிருந்தாலும், இது போன்ற குறைகளைத் தவிர்த்து வந்தால், நன்றாக இருக்குமே..! என்னைப் பொறுத்தவரை, சினிமாப் பகுதி கொஞ்சம் 'ஓவர் டோஸ்' தான். அமெரிக்கத் தேர்தல் - அமர்க்களத் தேர்தல் கற்பனை - இரண்டாம் பாகம், நல்ல ரசிக்கக்கூடிய கற்பனை. தலையங்கம் ரொம்ப 'க்ரிஸ்ப்'. கு.அழகிரிசாமி கதை சுமார் ரகம் தான். குறுக்கெழுத்துப் புதிர், விடைகளைப்பார்த்தால் கூட புரியவில்லை. மிகவும் 'ஹை ·பன்டா' சமாச்சாரம்

ஷங்கர், கலி·போர்னியா.
******


மூன்றாவது, இதழ், மிகவும் அற்புதமாக வந்துள்ளது. என்போன்றவர்களின் கருத்துகளுக்கு, செவிசாய்த்திருப்பது, குறித்து நன்றி. எல்லாக் கதைகள், கட்டுரைகளயும் படித்துவிட்டோம்., பொதுவாக, பத்திரிக் கையின் அமைப்பு, மிக நன்றாக, எல்லா வயதினரும் படிக்கும் வகையிலே உள்ளது. என்னுடைய மாமியாரும், தங்களுடைய பாராட்டுதலை தெரிவிக்கிறார்கள். தரம் நன்றாக உள்ளது. நல்ல முயற்சி. எங்களுடைய நல் வாழ்த்துக்கள்.

மைதிலி,மும்பை
******
என்னுடைய நண்பர்களுக்கெல்லாம், பத்திரிகை மிகவும் பிடித்திருந்தது. நல்ல தரமான கதை, கட்டுரைகள், சுவையான பல செய்திகள் என்று பத்திரிகை, பலதரப்பு வாசகர்களையும், திருப்தி செய்யும் வகையிலே அமைக்கப்பட்டுள்ளது.

மாலா குமார், கலி·போர்னியா.
******


பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவைக்கதை நன்றாக இருந்தது. சமையல் குறிப்புகள் 'சூப்பர்'. சமைத்துப் பார்த்ததில் 'டேஸ்டும் சூப்பர்'. குடியரசு தினத்தை ஒட்டிய 'கவர்', கண்ணைக் கவர். மாத ராசி பலன் கிடையாதா..? ஏமாற்றமாக உள்ளதே...! நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், பல பத்திரிகைகளில் வரும் விதவிதமான ராசி பலன்களைப் படிப்பதே சுவைதான். சற்று முயற்சி செய்யுங்களேன்.

ஷ்யாம், கலி·போர்னியா
******


நியூயார்க் வரசித்தி விநாயகர் கோவில் கேன்டீனில் கேட்டது:

"பிரமாதமா இருக்குப்பா.. இந்த தோசைக்கும், சட்டினிக்கும், இந்த தமிழ் மேகஸீனுக்கும், அமர்க்கள காம்பினேஷன்பா..!. இவ்வளவு நல்ல க்வாலிட்டியோட ஒரு தமிழ் பத்திரிகை வரும்னு, போன வருஷம் நினச்சிருப்போமாய்யா..?"

உடனிருந்து கேட்ட அருண்,கலி·போர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline