|
டிசம்பர் 2022: வாசகர்கடிதம் |
|
- |டிசம்பர் 2022| |
|
|
|
நவம்பர் தென்றல் இதழில் அண்ணாமலை அவர்களின் அரசியல் கலப்படமில்லாத நேர்காணல் படித்தேன். மிகவும் அருமை. தமிழகமும் இந்தியாவின் கலிஃபோர்னியாவாக ஏன் மாறக்கூடாது என்ற யோசனையில், தொழில் தொடங்கவும் உயர் கல்விக்கும் வளர்தொழில் முனைவோருக்கான வசதிகளுக்கும் உகந்ததொரு மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டிருந்தார். தலைமுறைகளைத் தாண்டிய இந்திய வம்சாவழியினரை இந்தியாவுக்கு அடிக்கடி பயணிக்கச் சொல்லி இந்தியாவுடனான அவர்களது வேர்களைப் புதுப்பிப்பதில் இந்திய அரசாங்கம் பெருமுயற்சி செய்து கொண்டிருப்பதாகக் கூறியது மகிழ்ச்சியான விஷயம்.
வில்லிசை என்றாலே நினைவிற்கு வரும் கலைஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு எங்களின் அஞ்சலி. அலமாரியில் மு. அருணாசலம் அவர்களின் 'புத்தகமும் வித்தகமும்' நூலிலிருந்து அறியாமை பற்றி எழுதியிருப்பது வியக்கும்படியாக இருந்தது.
விகாஷ் ரயாலி அவர்களின் 'நன்றி நவிலல்' சிறுகதை இப்படியும் கொண்டாடலாம் என்ற மனநிலையை ஏற்படுத்தியது. அருமையான சிறுகதை. அனைத்து விஷயங்களும் அற்புதம். |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|