|
பிப்ரவரி 2022: வாசகர்கடிதம் |
|
- |பிப்ரவரி 2022| |
|
|
|
|
ஜனவரி மாத 'தென்றல்' இதழில் கவிஞர் வைரபாரதி நேர்காணல் படித்தேன். பொழுது போக்குக்காக எழுதாமல், என் பொழுதே எழுத்தால்தான் நிரம்பி இருந்தது அப்படி ஒரு சுமைதாங்கியாக எழுத்துக்கள் என் மன பாரங்களைத் தாங்கி இருக்கிறது என்ற வரிகளும், வைரபாரதி பெயர் வரக் காரணமும், அற்புதமான மற்ற விவரங்களும் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன் .
எழுத்துக்கள் மூலமாகவே தன்னுடைய முத்தாலங்குறிச்சி என்ற ஊரை உலகறியச் செய்த எழுத்தாளர், தாயின்மீது மிகுந்த அன்புடைய முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் சில பதிவுகளை நான் படித்துள்ளேன்.அவர் எடுத்துக்கொண்ட பணிகள் யாவும் மிகவும் அருமையானவை.
கிராமியக் கலைகளை வளர்த்துக் கொண்டிருக்கும், கிராமியப் புதல்வன் டாக்டர் ரா. கலையரசனின் சாதனைகள் மிக உயர்ந்தவை. .அழிந்து கொண்டிருக்கும் கலைகளை அழியாமல் பாதுகாத்து வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அவரது முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
தென்றலின் அனைத்துப் பகுதிகளும் இந்தச் சூழ்நிலையிலும் அருமையாகப் பதிவிட்டு வருவகிறீர்கள். மிக்க நன்றி .வணக்கம் . |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிபோர்னியா |
|
|
|
|
|
|
|