|
ஜனவரி 2001: வாசகர் கடிதம் |
|
- |ஜனவரி 2001| |
|
|
|
தென்றல்' இதழின் முதல் வெளியீட்டைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகச் சிறப்பான பணி. சி.கே அவர்களின் விடாமுயற்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகவே இதனைக் கருதுகிறேன். ஆசிரியர் அஷோக் அவர்களின் படைப்பு மிகவும் கவருவதாக அமைந்திருந்தது. பரத் பாலா அவர்களுடனான குருவிஷால் ராமனின் நேர்காணல், பல தகவல்களை விளக்கமாக அறிந்து கொள்ள உதவியது. உண்மையில்,'தென்றல்' இல்லையேல் பரத் பாலா குறித்து நான் அறிந்து கொண்டிருக்கவே முடியாது.
'தென்றலுக்கும்' அதன் ஆக்கத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கும், மீண்டும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீகாந்த் ராமபத்ரன், பிரிமாண்ட், கலிபோர்னியா.
*****
அற்புதமான முயற்சி. ஏராளமான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் விதமாக அமைந்துள்ளது. 'தென்றலை' எனது நண்பர்களுக்கெல்லாம் மகிழ்வுடன் விநியோகித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
பிரபு நாராயணா, பிரிமாண்ட், கலிபோர்னியா.
*****
கடந்த வார இறுதியில் 'தென்றல்' இதழ் ஒன்று எனைத் தேடி வந்தது. உண்மையிலேயே மிகச் சிறப்பான பணி. இத்தகைய தரமான இதழைனை வெளிக் கொணர்ந்ததற்குப் பாராட்டுகள். ஏராளமான தமிழ் அன்பர்கள் 'தென்றல்' இதழை வாசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் அறிவுச் செறிவு குறித்து அறிந்துகொள்வதற்கு, புதிய தலைமுறையினருக்கான ஒரு உறவுப் பாலமாகவே 'தென்றல்' விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சுரேஷ் மால்லின், சன்னிவேல், கலிபோர்னியா.
***** |
|
'தென்றல்' இதழினைப் படித்து மகிழ்ந்தேன். மிக நல்ல முயற்சி. 'தென்றல்' குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.
அகிலா, சன்னிவேல், கலிபோர்னியா. *****
தென்றல் ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒரு பத்திரிக்கை. மிகவும் சுகமாக இருக்கிறது. பழமையும் புதுமையும் கலந்து எல்லாவிதத் துறைகளிலும் ரசிக்கத்தக்க விஷயங்களை எடுத்துக் கூறி இருக்கிறீர்கள். இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு தெரிந்த, தெரியாத, பல விஷயங்களை எடுத்து அள்ளி கொடுத்திருக்கிறீர்கள்.
வயதானவர்கள் முதல் இளையர் வரை படித்து மகிழ்ந்து, அனுபவித்து தெரிந்து கொள்ள அனேக புது அம்சங்கள் இருக்கின்றன. மேலும் நமது புகுந்த மண்ணின் மாதாந்திர நிகழ்ச்சிகளின் நிரல் போன்ற தொகுப்புகள் வர இருப்பது கேட்கமிக்க மகிழ்ச்சி.
அமெரிக்க தேர்தல்-அமர்க்கள தேர்தல்' - கட்டுரையில் கடைசி பகுதி மிகவும் பாராட்டுக்குரியது. எல்லா பகுதிக் கட்டுரைகளுமே உயர்தரமாக உள்ளன. சேர்க்கக்கூடிய பகுதிகள் -
நேயர் தபால், கேள்வி பதில், ஹாஸ்ய துணுக்குகள், சான்றோர் வாக்குகள், சிறுவருக்கான சின்ன சின்ன உயர்ந்த கருத்துகளை வெளிப்படுத்தும் சிறுகதைகள் - எந்த நாட்டினுடையதாக இருந்தாலும் இந்த நாட்டுக்கு சிறுவர்களுக்கு உகந்ததே. கதைகள் இல்லாவிட்டால்சித்திரங்கள் மூலமாகவும் விளக்கலாம். யார் மனமும் புண்படாமல் கேலி சித்திரங்களும்சேர்க்கலாம். இந்தியாவின் சரித்திர வரலாறு பெற்ற தலங்கள், கோயில்களின் தலபுராணங்கள் முதலியன பற்றிய கட்டுரைகளை பழைய ஏடுகளிலிருந்து தழுவியோ மொழி பெயர்த்தோ எழுதலாமே.
தமிழ் அன்பர் கூப்பர்டீனோ, கலிபோர்னியா. |
|
|
|
|
|
|
|