|
அக்டோபர் 2010: வாசகர் கடிதம் |
|
- |அக்டோபர் 2010| |
|
|
|
|
இந்தியாவிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள அமெரிக்காவில் தென்றல் மாதாந்திரத் தமிழ் இதழ் வெளிவருவது என் போன்றவர்களுக்கு ஒரு வரப்ரசாதம். பொழுதுபோக்கு என்பதோடு இல்லாமல், சிறந்த, உரிய, அரிய கருத்துக்களை அப்படியே தத்ரூபமாக தங்கள் தென்றல் இதழ் வெளிப்படுத்துகிறது. இதை நான் தாயகம் திரும்பியதும் எனது உறவினர் மற்றும் நண்பர்களோடு அவசியம் பகிர்ந்து கொள்வேன். வளர்க தமிழ். வீசட்டும் தென்றல்.
எஸ்.கல்யாணராமன், மாசிடோனியா, ஒஹையோ
***
விதவிதமாய்க் கவிதை எழுத விருப்பம் இருக்குது - அப்படி விரும்பியதை வடிப்பதற்கே தாளும் இருக்குது
விரைவாக எழுதிடவே மனதும் துடிக்குது - நாம் எழுதியதை வெளியிடவே ’தென்றல்’ இருக்குது
கவிஞனைக் கை தூக்கிடவே காத்துக் கிடக்குது - அந்த எழுத்தாளனை ஏற்றிடவே பார்த்து இருக்குது
நல்ல தமிழ் நெஞ்சங்களைக் குளிர வைக்குது - நல்ல நயமான எழுத்துக்களை நாட வைக்குது
சொல்லச் சொல்ல அதன் புகழை எழுதக் கூடுமோ - காலம் செல்லச் செல்ல தென்றல் வீச நெஞ்சம் வாழ்த்துது
சுபத்ரா பெருமாள், கூபர்டினோ, கலிபோர்னியா
*** |
|
|
|
|
|
|
|
|
|