ஐந்து முட்டாள்கள்
|
|
சிங்கமும் சுண்டெலியும் |
|
- |ஜூன் 2003| |
|
|
|
The Lion and the Mouse சிங்கமும் சுண்டெலியும்
Once there lived a Lion in a forest. One day while it was sleeping, a mouse came and started playing on the Lion by hopping and jumping over it, thus disturbing it's sleep. ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் அது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சுண்டெலி சிங்கத்தின் மீதுத் தாவிக் குதித்து விளையாடியது.
The Lion awoke from it's slumber and caught hold of the mouse. The mouse started shivering in fear. It pleaded to the Lion saying, '' Oh! King of the forest! Please pardon me/ If you spare my life now, I will help you at the appropriate time. The Lion guffawed at this offer of help and let it go free. உறக்கம் கலைந்த சிங்கம் கோபம் கொண்டு சுண்டெலியைப் பிடித்துக் கொண்டது. சுண்டெலி நடுங்கிக் கொண்டே, ''காட்டு ராஜாவே! என்னை மன்னித்து விடுங்கள். இப்பொழுது என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டால் தக்க சமயத்தில் நான் உதவுவேன்'', என்று சொல்லி வேண்டியது. இதைக் கேட்ட சிங்கம் நகைத்து, ''நீயா எனக்கு உதவப் போகிறாய்? பிழைத்துப் போ!'' என்று சொல்லி விட்டுவிட்டது. |
|
After a few days, the Lion was caught in a trap laid by the hunters. It tried to wrench itself free but it was of no avail. It roared in distress. The Mouse heard the roar and came running to see what had happened. It nibbled the net and set the Lion free. சில நாட்களுக்குப் பிறகு, சிங்கம் வேடர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டது. பலமுறை முயன்றும், அதனால் விடுபட முடியவில்லை. வருத்தத்துடன் கர்ஜித்தது. தற்செயலாய்ச் சிங்கத்தின் அலறலைச் சுண்டெலி கேட்டது. சிங்கம் இருக்கும் இடம் நோக்கி ஓடிவந்து வலையைக் கடித்துச் சிங்கத்தை விடுவித்தது.
The Lion praised the Mouse saying,'' My lovable friend! I regret for having laughed at your size. Though you are small, you have helped me in a big way. Thank you so much''. என் அன்பார்ந்த நண்பா! உனது சிறிய உருவத்தைக் கண்டு அன்று ஏளனமாகப் பேசினேன். ஆனால், இன்று நீ எனக்குப் பெரிய உதவி செய்திருக்கிறாய்! மிகவும் நன்றி'' என்று சொல்லி எலியைப் பாராட்டியது. |
|
|
More
ஐந்து முட்டாள்கள்
|
|
|
|
|
|
|