Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி
- சேசி|ஜூலை 2006|
Share:
Click Here Enlargeவேகமாக வந்த நண்பர் "Cote d'Ivoire" என்று அசத்தலாக தனக்குத் தெரிந்த அரை குறை பிரஞ்சு மொழியில் ஏதோ சொல்ல, அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நான் முழித்தேன். "என்ன உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் பார்க்கவில்லையா? ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரஞ்சுப் பெயர்தான் அது" என்றார்.

உலகின் ஆறு கண்டங்களில் இருந்து 32 தேசங்கள் 2006 உலகக் கோப்பையில் பங்கு பெறுகின்றன. 198 நாடுகள் மொத்தம் போட்டி யிட்டதில் இந்த 32 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டன. ஜெர்மெனியில் நடக்கும் இந்தப் போட்டிகளில் பங்கு பெறும் நாடுகள் உலகின் எந்தப் பகுதியில் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள நீங்கள் geography bee-ல் பரிசு வாங்கியவராக இருக்க வேண்டும். 14 நாடுகள் ஐரோப்பாவில் இருந்து, 8 நாடுகள் வட, தென் அமெரிக்கப் பகுதியில் இருந்து, 5 நாடுகள் ஆப்பிரிக்காவில் இருந்து, 5 நாடுகள் மத்திய ஆசியா, கிழக்கு ஆசியாப் பகுதியில் இருந்து இந்த வருடம் பங்கு பெறுகின்றன.

இந்தப் போட்டியில் பிரேசில் மீண்டும் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பிரேசில் இதுவரை உலகக் கோப்பையை 5 முறை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற பெருமையைப் பெற்று இருக்கிறது. அர்ஜெண்டினா, இங்கிலாந்து, ஜெர்மெனி, இத்தாலி நாட்டு அணிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இவையும் உலகக் கோப்பையை முந்திய வருடங்களில் வென்ற நாடுகள். இந்தக் கட்டுரை பதிப்பில் ஏறும் போது முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்திருக்கும்.

இந்த வருடம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டோ. இவரது முழுப் பெயர் ரொனால்டோ லூயி நசாரியோ டா சில்வா (Ronaldo Nazario Luiz da Silva). இது இவர் பங்கு பெறும் 4-வது உலகக் கோப்பைப் போட்டி. 1994-ல் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் முதன் முறை இவர் இடம் பெற்றபோது இவருக்கு வயது 17. கால்பந்து என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிலே (Pele) உலகக் கோப்பையில் 12 கோல் போட்டிருக்கிறார். அந்தச் சாதனையை ஈடு கட்டியவர் ரொனால்டோ. இந்த வருட முதல் சுற்றுப் போட்டிகளில் மேலும் இரண்டு கோல்கள் போட்டு உலகக் கோப்பையில் அதிக கோல்போட்ட ஜெர்மெனியின் கெர்ட் முல்லரின் (Gerd Muller) சாதனையை ஈடு செய்திருக்கிறார். இந்தப் போட்டிகள் முடிவதற்குள் மேலும் அதிக கோல்கள் போட்டு புதிய சாதனையைச் செய்வார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. உலகக் கோப்பையை வென்ற 1994, 2002 அணிகளில் பங்கு பெற்ற ரொனால்டோ, மீண்டும் இந்த வருடம் பிரேசி லுக்குக் கோப்பையை கொண்டு செல்வாரா?

இங்கிலாந்து அணியின் காப்டன் டேவிட் பெக்கம் (David Beckham). இவர் இந்தியர் பலருக்கு சினிமா மூலம் அறிமுகமானவர்! "Bend It Like Beckham" ஞாபகம் இருக்கிறதா? அந்தப் படத்தின் கதாநாயகியின் கால் பந்தாட்ட ஹீரோ இவர்தான். ஆனால் படத்தில் இவர் நடிக்கவில்லை. இவரைப் போன்ற தோற்றமுள்ள ஒரு நடிகரைத்தான் பயன் படுத்தினார்கள். உண்மையான பெக்கமைப் பார்க்க வேண்டுமென்றால் இங்கிலாந்தின் ஆட்டத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்!

கால்பந்தைப் பொறுத்தவரை நமக்குப் பிறந்த வீடும் சரியில்லை, புகுந்த வீடும் சரியில்லை! நான் இந்தியா, அமெரிக்கா நாடுகளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அதிர்ஷ்ட வசமாகப் போட்ட கோல் மூலம் இத்தாலியுடன் டிரா செய்த அமெரிக்கா, செக்கோஸ்லோ வாக்கியா, மற்றும் கானா-விடம் தோல்வி அடைந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறத் தவறி விட்டது. ஆப்பிரிக்க நாடான கானா பங்கு பெறும் முதல் உலகக் கோப்பை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மெனியின் நியூரம்பர்க் நகரில் நடந்த போட்டியில் கானா, 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அமெரிக்காவை வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. சரித்திரம் படித்தவர்களுக்கு நியூரம்பர்க் படுகொலை ஞாபகம் இருக்கலாம். இந்தமுறை பலியானது அமெரிக்கா!

இந்தியா இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கு பெற்றதில்லை. சென்ற வருடம் நடந்த தகுதிபெறும் போட்டிகளில் முதல் சுற்றில் தனது பிரிவில் ஜப்பான், ஓமன் நாடுகளுக்குப் பின் வந்து, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறத் தவறியது. இதுவரை 1950-ஆம் வருடம் நடந்த உலகக் கோப்பைக்கு மட்டுமே தகுதி பெற்றிருக்கிறது. ஆனால் பிரேசிலில் நடந்த அந்தப் போட்டியில் பங்குபெறவில்லை. ஷ¥ போடாமல் வெறும் காலுடன் விளையாட அனுமதி கிடைக் காததும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.
Click Here Enlargeஉலக அளவில் இந்திய அணி 117-வது இடத்தில்தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டைவிட இளைஞர்கள் அதிகமாக விளையாடுவது கால்பந்துதான். இந்த விளையாட்டிற்கு அதிகச் செலவில்லை. காலி இடமும், ஒரு பந்தும் இருந்தால் போதும். இந்தியா போன்ற ஏழை நாட்டிற்கு ஏற்ற விளையாட்டு இது. உலகம் முழுதும் பல நாடுகளில் பிரபலமாக இருந்தும், கால்பந்து ஏன் இந்தியாவில் வளரவில்லை?

இந்தியாவில் கால்பந்து விளையாட்டுகளை நிர்வகிப்பது All India Football Federation (AIFF). உலக அளவில் உலகக் கோப்பை உட்பட கால்பந்து விளையாட்டுகளை நிர்வகிப்பது Federation Internationale de Football Association (FIFA). 1937-ல் துவங்கிய AIFF, 1948-ல் FIFA-ல் உறுப்பினராகச் சேர்ந்தது. கால்பந்தின் வளர்ச்சிக்காக AIFF-ற்கு உலக அமைப்பான FIFA பண உதவி கொடுத்து வருகிறது. AIFF-ஐத் தவிர இந்தியாவில் விளையாட்டுகளைக் கட்டுப் படுத்தும் அமைப்பு Sports Authority of India. இதற்கு FIFA-விடம் இருந்து பண உதவி வருவதில்லை. AIFF அமைப்பின் தற்போதைய தலைவர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி இரண்டாம் முறையாக 2004-ல் இருந்து 2008 வரை நான்கு வருட காலத்திற்குத் தேர்ந் தெடுக்கப் பட்டிருக்கிறார். பல வருடங்களாக AIFF இயங்கி வந்தாலும், இந்தியாவில் கால்பந்து வளர்ச்சிக்காக எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த அமைப்பில் இருக்கும் அரசியல்தான் முக்கியக் காரணம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் தாஸ்முன்ஷி 2010-ல் இந்தியா நிச்சயமாக உலகக் கோப்பையில் பங்கு பெறும் என்று கூறி வருகிறார்.

இந்தியாவில் கால்பந்து லீக் ஆட்டங்கள் புகழ்பெற்றவை. மோகன் பகான், கிழக்கு வங்காளம் போன்ற சிறந்த குழுக்கள் இருக்கின்றன. ஆனால் சமீப காலங்களில் பண வசதியுள்ள குழுக்கள் இந்தியாவில் இருக்கும் திறமையான இளைஞர்களைத் தேர்ந்தெடுக்காமல் வெளிநாடுகளிலிருந்து, முக்கியமாக ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டாம் தர ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுக் கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

பல திறமையான இளைஞர்கள் இருந்தும், சரியான பயிற்சி வசதிகளும், பயிற்சியாளர் களும் இல்லாததே இந்தியா கால்பந்தில் தேங்கியிருப்பதற்குக் காரணம் என்று பலர் கூறுகிறார்கள். "அமைப்பாளர்களே இந்தத் தேக்கத்திற்குக் காரணம்" என்று Asian Football Confederation (AFC) தயாரித்த அறிக்கை AIFF-ஐ சுட்டிக் காட்டுகிறது. AIFF விழித்து எழுமா? இந்தியாவில் கால்பந்தின் எதிர்காலம் மாறுமா?


கேசி
Share: 




© Copyright 2020 Tamilonline