டிசம்பர் 2024: வாசகர் கடிதம்
Dec 2024
தென்றல் நவம்பர் இதழ் வாசித்தேன். சிறுவர்கள் எதிர்க்காலத் தூண்கள், அவர்களை நெறிப்படுத்தி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதே என் கொள்கை என்ற உறுதிப்பாட்டுடன் எழுதிக்கொண்டிருக்கும் எ. சோதி அவர்களைப் பற்றிய கட்டுரை அருமை. அவரது பணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
படுதலம் சுகுமாரனின் படைப்புகள் சுவாரஸயமாக நேரம் செல்வதே தெரியாதபடி அமைந்திருக்கும்.
கனலி விஜயலட்சுமியின் 'நோவா ,என் மகனே!' வித்தியாசமான கற்பனை, விறுவிறுப்பான நடை, உண்மை சம்பவமாகவே மனதில் பதிந்துவிட்ட நெகிழ்வான குறுநாவல். அருமை மேலும்...
|
|