வாழைப்பூ கட்லெட்
|
|
காலி ஃபிளவர் இனிப்பு வடை |
|
- வசந்தா|ஏப்ரல் 2015| |
|
|
|
|
|
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - 1 1/2 கிண்ணம் காலிஃபிளவர் (சிறியது) - 1 தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம் சர்க்கரை - 2 1/2 கிண்ணம் மைதா மாவு - 2 மேசைக்கரண்டி நெய் - 1 மேசைக்கரண்டி பொடித்த முந்திரி - 1 மேசைக்கரண்டி ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி பால் - 1 1/4 லிட்டர் டால்டா அல்லது எண்ணெய் (பொரிக்க) - 1/4 கி
செய்முறை காலிஃபிளவரை பூக்களாக ஆய்ந்து சிறிது உப்புச் சேர்த்து கொதிநீரில் சுத்தம் செய்யவும். கடலைப்பருப்பைச் சிவக்க வறுத்து 1/4 லிட்டர் பால் விட்டு காலிஃபிளவர் சேர்த்து சிறிது நீரும் விட்டு பிரஷர் குக்கரில் நன்கு வேக வைக்கவும். மைதாமாவை நெய்விட்டு வறுத்து, பிறகு தேங்காய்த் துருவலை மீதி நெய்யில் சிவக்க வறுக்கவும். வெந்த காலிஃப்ளவர் பருப்பை அரைத்து 1 1/2 கிண்ணம் சர்க்கரை சேர்த்துக் கிளறி மிகவும் கெட்டியாவதற்கு முன் இறக்கிவிடவும். இதில் வறுத்த மைதாமாவு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, முந்திரி ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி வைக்கவும். இதற்கு முன் 1 லிட்டர் பாலில் 1 கிண்ணம் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து, பாதியாகக் குறைந்ததும் ஒரு மேசைக்கரண்டி ஏலப்பொடி சேர்த்து கலக்கி இறக்கவும். பால் சற்று கெட்டியாகி விடும். டால்டா அல்லது எண்ணையைக் காயவைத்து, வடைகளை நிதானமான தீயில் பொரித்து (சற்றுச் சிவக்க) எடுக்கவும்.
இவற்றை சூடான இனிப்புப் பாலில் போட்டு ஐந்து நிமிடம் ஊறியதும் ஒரு தாம்பாளத்தில் எடுத்து வைக்கவும். எல்லா வடைகளையும் ஊறி எடுத்த பிறகு எஞ்சிய பாலைச் சமமாக வடைகள்மீது விடவும். இதை குளிரவைத்தும் சாப்பிடலாம். |
|
வசந்தா, சான்ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
More
வாழைப்பூ கட்லெட்
|
|
|
|
|
|
|