நவீன இட்டிலி, தோசை
|
|
|
|
|
தேவையான பொருட்கள்: இட்டிலி மாவு - 2 கிண்ணம் உருளைக் கிழங்கு - 1 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - சிறிய துண்டு பீன்ஸ் - 6 காரட் - 1 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி சீஸ் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவிட்டு உரித்து, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாய் நறுக்கிப் போட்டு மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலையும் சேர்த்துப் பொரியலாகச் செய்து வைக்கவும். இட்டிலித் தட்டில் எண்ணெய் தடவி அரை கரண்டி மாவை விட்டு மேலாகப் பொரியலை சிறு வடைபோலத் தட்டி வைத்து சீஸ் தூவவும். அதன்மேல் இன்னொரு கரண்டி இட்டிலிமாவை ஊற்றி வேகவிட்டு எடுத்துச் சாப்பிடவும். இது பார்ப்பதற்கும் அடுக்காக, அழகாக இருக்கும். எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். தொட்டுக் கொள்ளத் தேங்காய்ச் சட்னி நன்றாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |
|
|
More
நவீன இட்டிலி, தோசை
|
|
|
|
|
|
|