சர்வலகு: மாணவர்களுக்கு மேடை வாய்ப்பு BATS: பட்டிமன்றம் அமெரிக்கத் தமிழ் மையம்: ஆண்டு விழா ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி: தீபாவளி பாஸ்டன்: விட்டல் ராமமூர்த்தி வயலின் கச்சேரி நர்த்தனா: சலங்கை பூஜை CTS: லஷ்மன் ஸ்ருதி மெல்லிசை பாரதி தமிழ் சங்கம்: 'யக்ஞசேனி' நாட்டிய நாடகம் டாலஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளை கலைநிகழ்ச்சி அரங்கேற்றம்: சர்வலகு தாளக்கலை மையம் விரிகுடாப் பகுதி: பக்ரீத் விழா இந்திய கிறிஸ்துவ ஆலயம்: வெள்ளி விழா
|
|
BATS: லஷ்மன் ஸ்ருதி மெல்லிசை |
|
- |நவம்பர் 2014| |
|
|
|
|
|
அக்டோபர் 18, 2014 அன்று, தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக லஷ்மன் ஸ்ருதி குழுவினர் அளித்த மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை ஹேவர்ட் சபோ கல்லூரி அரங்கத்தில் பாரதி தமிழ்ச் சங்கமும் கலாலயாவும் இணைந்து வழங்கின. இதில் மாலதி, சாய் சரண், கிருஷ், அனிதா, அனு ஆகிய பாடகர்களும் நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரும் பங்கேற்று திரைப் பாடல்களையும் நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் வழங்கினார்கள். நடிகர் விவேக் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி தான் செயல்படுத்தி வரும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் குறித்து விவரித்தார். சில பாடல்களைப் பாடியும், நடித்தும், மிமிக்ரி செய்தும், ஹார்மோனிகா வாசித்தும் தனது பல்கலைத் திறனை வெளிப்படுத்தினார். இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது சகோதரர்கள் பாவலர் வரதராஜன் மற்றும் இளையராஜா ஆகியோருடனான தனது அனுபவங்களைச் சொல்லி, தான் இசைமையைத்துப் பாடிய பாடல்களைப் பாடினார். இந்த இசை நிகழ்ச்சியின் புகைப் படங்களை பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.
சங்கத்தின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை அறியவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உதவி செய்யவும் அணுகுக: மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com இணைய தளம்: www.Bharatitamilsangam.org முகநூல்: facebook.com/bharatitamilsangam |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More