தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015 மாண்டலின் ஸ்ரீனிவாஸ் - சில நினைவுகள் தெரியுமா?: டெக்ஸ்வேல்லி: ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள் தெரியுமா?: சிகாகோ: நாட்யாவுக்கு மக்ஆர்தர் நிதிநல்கை தெரியுமா?: 3rd i வழங்கும் 12வது தெற்காசியத் திரைப்பட விழா
|
|
தெரியுமா?: மேரிலாந்து: 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' பிரகடனம் |
|
- சின்னமணி|நவம்பர் 2014| |
|
|
|
|
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான மேரிலாந்தில் அக்டோபர் 4ம் தேதி 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' ஆக அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தை கவர்னர் மார்ட்டின் ஓ மலே அவர்களின் சார்பில் துணைச்செயலாளர் ராஜன் நடராஜன் வழங்கினார். அறக்கட்டளையின் 'அனுபவம் புதுமை' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ராஜன் நடராஜன். சாதனைத் தமிழராக கவுரவிக்கப்பட்டார். அறக்கட்டளையின் இயக்குனர்கள் வேலு ராமன் மற்றும் விசாலட்சி வேலு டாக்டர் ராஜனுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். ராஜனின் மனைவி, அமெரிக்க விவசாயத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் டாக்டர் சாவித்திரி நடராஜனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய ராஜன், வீட்டில் இருவரும் வேலைக்குச் செல்பவர் என்றால் ஒருவர் புதிய தொழில் முயற்சியில் இறங்கலாம். தமிழ் தொழில் முனைவோர்கள் அதிகரிக்கும்போது தமிழ்ச் சமுதாயத்தின் பொருளாதார பலம் கூடும் என்று சுட்டிக் காட்டினார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவர்களைச் சந்தித்த டாக்டர் ராஜன், மாணவர்கள் Listen, Learn and Lead என்ற மூன்று தாரக மந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். |
|
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |
|
|
More